பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/344

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ఫి : தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

இதற்கு ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின் இதுவுங் கைக்கிளைப்புறனாகிய பாடானாயிற்று. செவியுறைக்கும் இஃதொக்கும்.

உதாரணம் :

‘எருமை யன்ன கருங்கல் லிடைதோ நாணிற் பாக்கும் யானைய முன்பிற் காணக நாடனை தீயோ பெரும நீயோ ராகலி னின்னொன்று மொழிவ லருளு மன்பு நீக்கி நீங்கா திசயங் கொள்பவதோ டொன்றாது காவல் குழவி கொள்பவரி னோம்புமதி யளிதே தாணேயது பெறலருங் குரைத்தே. (புறம்-டு) இதனுள் நிரயங் கொள்வாரோ டொன்றாது காவலையோம் பெண வேம்புங் கடுவும்போல வெய்தாகக்கூறி அவற்கு உறுதி பயத்தவின் வாயுறை வாழ்த்தாயிற்று.

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகு" (புறம்-க அச)

என்னும் புறப்பாட்டும் அது.

தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகை களுக்கு நூலாகவின், அவர் சூத்திரப்பொருளாகத் துறை கூற வேண்டுமென்றுணர்க. செவியுறைதானே? (தொல்-பொ.செ.க.கச) என்னும் சூத்திரப் பொருண்மை இவ்வுதாரணங்கட்கு இன்மை உணர்க."

1. இதற்கு-இவ்வாறு வேம்பும் கடுவும் போல வெய்தாகக் கூறி வாழ்த்து தங்கு. ஒரு தலைவன் வேண்டான யினும்-ஒரு தலைவன் விரும்பானாயினும், வாழ்ச்சிப்படுத்தல்-வாழும்படி செய்தல்,

வேம்பு, கசப்புடையது. கடு-கடுக்காய்; துவர்ப்புடையது.

(பாடம்) 2 மொய்ம்பின்’ 3 பன்காக் காக்கும்

4. எருமையன்ன? (புறம் காய் நெல்லறுத்து’ (புறம் கஅச) என வரும் பாடல்களுக்குப் புறநானு ற்றின் பழைய உரையாசிரியர் பிற்கால நூல்களாகிய புன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை என்பவற்றை இலக்கணமாகக் கொண்டு செவியுறை எனத் துறை கூறியுள்ளார். புறநானூறு முதலிய சங்கத் தொகைகளுக்கு அக்த்தியமும் தொல்கர்ப்பியமுமே இல்க்கன்ம் தொல்காப்பில் னார் கூறிய வேம்பும் கடு:ம்போல வெய்தாகக் கூறி உறுதிபயக்கும் முறையில் வாழ்த்துதற் பொருண்மை இச்செய்யுட்களில் அமைந்திருத்தலால் இப்பாடல்களை வாயுறைவாழ்ந்து என்னுந் துறையுள் அடக்குதலே ஏற்புடையதாகும் என்பது கச்சினார்க் கினியர் துணிப்ாகும் ,