பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/346

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ໍ ຼ 2 ຼ . தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

கிளையும், காமப்பகுதி (தொல்-பொ-புறம்-உஅ) என்ற கைக் கிளையும், களவியலுண் முன்னைய மூன்றும்’ (தொல்-பொ-கள. கச) என்ற கைக்கிளையும் போலாது எஞ்ஞான்றும் பெண்பாலார் கூறுதலின்றி இடைநின்ற சான்றோராயினும் பிறராயினுங் கூறு தற்கு உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பினராகிக் கடைநிலைக் காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்ததனால் துறந்த பெண்பாற் கைக்கிளையாதலின் திரிபுடைத்தாயிற்று. இது முதனிலைக் காலத்துத் தான் குறித்து முடித்துப் பின்னர் அவளை வருத்தஞ் செய்து இன்பமின்றி யொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று.

உதாரணம் :

“அருளா யாதலோ கொடிதே யிருள்வரச் சிறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினே மாக நீறுை நெய்தலிற் பொலிந்த வுண்கண் கலுழ்ந்துவா சரிப்பனி பூணக நனைப்ப வினைத லானா ளாக விளையோய் கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென யாந்தற் றெழுதனம் வினவக் காந்தண் முகைபுரை விரலிற் கண்ணிர் துடையா யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி யெம்போ லொருத்தி நலனயந் தென்றும் வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேக னொல்லென வொலிக்குத் தேரொடு முல்லை வேலி நல்லு ரானே.' (புறம்-க சச)

கைக்கிளை வகையாவன; 1. தலைவன் தலைவியென்னும் இருபாலரிடத்தும், பொதுவாகத் தோன்று

தற்குரிய ஒருதலைக் காமமாக அகத்திணையியலுட் கூறப்படுவது. 2. காமளுசாலா இளமையோள் வயின் சொல்லெதிர் பெறான் சொல்லியின்

புற லாகிய ஒரு தலைக் காமம். 3. இயற்கைப் புணர்ச்சிக்குமுன் நிகழ்ந்த காட்சி, ஐயம், தெரிதல், தேறல் என்னும் உள் ளக்குறிப்பு நான் குமாகிய நற்காம்த்துக்கு இன்றியமையாத ஒரு தலைக் காமம். 4. கடவுள் மாட்டுக்கொண்ட காமப்பகுதியாகிய கைக்கிளை. 5. எண் வகை மணத்துள் முன்னைய மூன்றும் எனப்பட்ட அகாரம், இராக்

கதம், பைசாசம் என்னும் கைக்கிளைக் குறிப்பு. 6. பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியைப்போன்று வாழ்க்கையின் முற் பகுதிக்கண் ஒத்த அன்பினராய் வாழ்ந்து கடைநிலைக் காலத்துக் கணவனால் துறக்கப்பட்ட பெண்பால் காரணமாக, அப்பெண்பால் கூறுதலின்றி இடை நின்ற சான்றோராயினும் பிறராயினும் கூ றுதலாகிய ஒருபாற் கேண்மையாகிய் கைக்கிளை. நிச்சினார்க்கினியர் கூறும் கைக் கிளை வகைபற்றிய இப்பகுப்பு முறை அவரது இலக்கியப் பயிற்சியின் பயனாக அவர் தாமே வகுத்துக் கொண்டதாகும், - - -