பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உகூ 版_乌_安

பொருள் : (5) கண்படை கண்ணிய கண்படை நிலையும்

இரவலன் உறக்கங் கருதிக் கூறும் கண் படை நிலை’ எனுந்துறையும்;

பொருள் :- (5) கபிலைகண்ணிய வேள்விநிலையும்-கபிலை

நிறஞ்சிறந்த ஆவைக்கருதிய வேள்வி நிலையும்:

குறிப்பு :- இதில், கபிலை என்பது அந்நிறமுடைய பசுவுக்கு ஆகுபெயர், இதனை "ஆக்கொடை என்பர் பழைய உரை காரரிருவரும்.

புறம்-166-ல் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் காட்டுப்பசு ஏழுவகை நாட்டுப்பசு ஏழுவகை யாகப் பதினாலுவகைப் பசுவால் வேட்ட புகழை மூலங்கிழார் குறித்தல் காண்க. இது பார்ப்பன வாகைப்பாடாண்.

பொருள் :- (7) வேலினோக்கிய விளக்குநிலையும்-மறத் தால் காத்து அறத்தா லோச்சும் செங்கோல் மாட்சி விளங்கும் விளக்குநிலை என்னுந் துறையும்;

குறிப்பு :- இதில், ஒக்கிய என்பது ஒச்சிய என்பதன் மரூஉ: இனி, வேலைநோக்கிய விளக்குநிலை' எனப் பாடங்கொள்வர் இளம்பூரணர். அதுவுமிப்பொருளே குறிப்பதாகும். இருளொழித்து ஒளியுதவும் விளக்குப்போல நாட்டில் வேந்தர் வேலும் கோலும் தீதகற்றி நலம் தருவதை விளக்குந்துறை என்பது கருத்து. வேல்” காவற்கும், கோல் முறை செய்தற்கும் ஆகுபெயர்கள். இதற்குச் செய்யுள் வருமாறு:

"இருமுந்நீர்க் குட்டமும்’ எனும் புறப்பாட்டில் (2-9)

'செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார் நின் னிழல்வாழ் வோரே

பகைவ ருண்ணா அருமண் ணினையே

அறந் துஞ்சுஞ் செங்கோ லையே; புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா ஏமக் காப்பினை.'

என வருவது இத்துறை. இன்னும், 'நெல்லுமுயிரன்றே’’ எனும் மோசிகீரனார் பாட்டும்(புறம். க.அசு)'நாடா கொன்றோ?' எனும் ஒளவை புறப்பாட்டும் (கஅஎ) இத்துறையே குறிப்பன.