பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ဖ္ရစ္သို႕”ုံရွှီး தொல்காப்பியம்-போருளதிகாரம்உைரைவளம்

மொருவகை யாக்குவோர், அவற்றோ டியலியைபுடைய வாகை பாடாண்களையும் புறமாகக் கொள்ளாமல் வேறுவகையாக்கி மாறுபடுவானேன்? அன்றியும் பொதுவியல்’ என்பன புறத்திணை களுக்குப் பொதுவாம் துறைகளேயாதலின், அவையொருதணி வேறு திணையாமாறில்லையே. பொதுவியலென்றோர் திணைப் பெயராகாமையுணர்க' என நச்சினார்க்கினியரும் இதை மதுரைக் காஞ்சியுரையில் மறுப்பதறிக.

மேலும் தொல்காப்பியர் போலவே கைக்கிளை பெருந்திணை களைப் பிற்காலத்தும் அகவகையாகவே கொண்டாள்வது. நம்பி யகப் பொருளாலும் அகத்துறைக் கோவைகளாலும் இனிது விளங் கும். அப்படியிருக்க, அவற்றையே மீட்டும் புறத்திணை வகை யுள்ளும் கூட்டி அத் திணைத்தொகை ய்ெண்ணை மிகுப்பானேன்? இன்னும் புறத்திணைகள் காலமிடங் கருதாமல் ஒழுக்க நெறியில் ஒவ்வோரகத்திணைகட்கும் புறனாதல் வேண்டுமென்ற நன்முறை யிறந்து, புறத்திணைத் தொகையைப் பெருக்கி ஒழுக்க வேறு பாடின்றி எண்ணுக்குப் பன்னிரண்டாக்கி, அவற்றிற்கு அகத் திணை யேழனொடுந் தொடர் பற்த்துக் காணும் பயன்தா னென்ன? பிந்திய நூல்கள் புறத்திணை யொவ்வொன்றன் துறை கள் இவை எனத் தொகுப்பதல்லால், தொல்காப்பியத்துட் போல அவ்வத்திணையின் செவ்வியல் விளக்காமையொன்றே, புறம்பன்னி ரண்டென வகுத்தற்குரிய இயல்வேறுபாடு காணொணாமையும், அத்தொகைவகை முந்துநூல் முறையொடு முரணிப் புலனெறி வழக்காகாமையும் வலியுறுத்தும். எனவே, தொல்காப்பியரின் புறத்திணை வகுப்புமுறையே இயல்பொடு பொருந்தும் நயமுடைத் தாய்த்தொன்றுதொட்டு என்றும் நின்று வழங்கற்குரிய முன்னைத் தமிழக நன்முறையாமென்பது கண்டு தெளிக.

இனி, அகத்திணையிய லுரைமுகத்துக் கூறியாங்குத் தொல் காப்பியர் நூலுள் இப்புறப்பகுதியிலும் பிறாண்டும் பிறர்கோள் பேசுமிடந்தவிர மற்றவையனைத்தும் வண்புகழ்மூவர் தண் பொழில்வரைப்பின் அகத்தவர்வழங்குந் தமிழ்ப் பழமரபுகளே கூறப்பெறுகின்றன என்பதனை மறக்கொணாது. இவ்வுண்மையை மறந்து உரைகாரர் பிற வடநூற்கொள்கைகளை இத் தமிழ் நூல் கூறுவதாகக் கொண்டதனால் பல சூத்திரங்களுக்குத் தொல் காப்பியர் நோக்குக்கும் அவர் சூத்திரச் சொற்போக்குக்கும் பொருந் தாப் பொருள்கூறி இடர்ப்படலாயினர். “தமிழ் கூறுநல்லுலகத்து எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி, செந்தமிழியற்கை சிவணிய