பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/351

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உசு 歴i-á。。

திணைவகையின்றித் துறைகளையே சுட்டுவதாய்க் கொள்ளின், இதிலும் இதையடுத்த சூத்திரத்தும் முறையே கூறப்பெறுவன தனித்தனியே எட்டிறந்தனவாமாதலானும் அதுபொருந்தாமை ஒருதலை. அதனாலுமது தொல்காப்பியர் கருத்தாகாது.

ஆய்வுரை 砂

நூறயா. உ.க. இது, பாடாண்டிணைக்குரிய துறைகளை விரித்துரைக்கின்றது.

(இ-ள்) இரவலர் பரிசிலர் முதலியோர்க்கு வேண்டுவன கொடுக்கும் வண்மையாளரைப் புகழ்ந்து அங்ங்ணம் வரையாது வழங்கும் உள்ளமில்லாத இவறன்மையாளரைப் பழித்தலும், புலவர்பாடும் புகழுடையவர்களை நெருங்கி முந்துற்று அவர்தம் வென்றியும் கொடைத்திறனும் முதலிய நல்வியல்புகளை எடுத் து மொழிந்து உளமுவந்து வாழ்த்தும் இயன்மொழிவாழ்த்தும், பரிசிலர் நெடுந்துரத்திலிருந்து வருகின்ற தமது வருத்தம் நீங்க (வள்ளலது முற்றத்தைக் காக்கும்) வாயில் காவலர்க்கு உரைத் தலாகிய வாயில்நிலையும், பாட்டுடைத் தலைவர் இனிய துயில் கொள்ளுதலைக் கருதிய கண்படைநிலையும், அத்தலைவர்கள் அந்தணர் முதலியோர்க்குப் பசுக்களைக் கொடுத்தலைக்கருதிய வேள்விநிலையும், (பாட்டுடைத் தலைவரது) வேலின் வெற்றியைக் குறித்துச் சுடர்விட்டெரியும் விளக்கினது நிலையினைக் கூறுதலும், (பின்னர்ப் பயன்விளைக்கும் என்னும் நல்லநோக்குடன் வேம்பும் கடுவும்போல வெஞ்சொல்லினைப் பிரித்தலின்றிப் பாதுகாத்தற் சொல்லாற் கூறும்) வாயுறை வாழ்த்தும், (உயர்ந்தோன்பால் அடங்கியொழுகுதல் வேண்டும் எனச்) செவியறிவுறுத்துக்கூறும் செவியறிவுறு உம், (பாட்டுடைத் தலைவரை வாழ்த்துதற்கண் அவர்தம் வழிபடு தெய்வத்தைப் புறத்தே காவலாக நிறுத்தி வாழ்த்தும்) புறநிலை வாழ்த்தும் (ஆடவர் மகளிராகிய இரு பாலாரிடத்தும் தோன்றும்) ஒருதலைக் காமமாகிய கைக்கிளை வகையும் என முற்கூறியவற்றுடன் தொகுத்துரைக்கப்படும் நான்கும் (ஆகிய பத்துத் துறைகளும்) பாடாண்டிணைக்குரியவாக உள்ளன எனக்கூறுவர் ஆசிரியர். எ-று.

"கொடுப்போரேத்திக் கொடாஅர்ப்பழித்தல்’ என்பதனைக் கொடுப்போர் ஏத்தல், கொடாஅர்ப்பழித்தல், கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப்பழித்தல் என மூவகைத் துறைகளாகக் கொள்வர் இளம்பூரணர். இதனாற் பெற்றது ஈவோரைப் புகழ்த லும் ஈயாதோரைப் பழித்தலும், ஈவோரைப் புகழ்ந்து ஈயா தோரைப் பழித்தலும் என்றவாறு என்பது அவர் கருத் து