பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


历_五_g_ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

இவ்வாறே, இயன்மொழி வாழ்த்து என்பதனையும் இயன் மொழி, வாழ்த்து, இயன்மொழி வாழ்த்து என மூன்றாகப் பகுத்துத் தனித்தனி யுதாரணங்காட்டுவர் இளம்பூரணர். கண் படை-கண்ணிமைகள் தம்முட் பொருந்துதல்; துயில்கொள்ளுதல் பாட்டுடைத்தலைவன் இனிது துயில் கொள்ளுதலைக்கூறுவது கண்படைநிலை என்னும் துறையாகும். கபிலை-பசு. கண்ணு தல்-கருதுதல்; கருதி வழங்குதலாகிய கொடைத்தொழிலைக் குறித்தது, வேல்-அரசர்க்கு வென்றிதரும் வேலாகிய படைக் கலம். மாசூர்ந்து மயங்கி அவியாது நின்றெரியும் விளக்கினது சுடர்நிலை நோக்கி அதுகாரணமாக மன்னது வேலின் வெற்றி இனிது புலனாதலைக் கூறி மன்னனை வாழ்த்துதலால் வேலை நோக்கிய விளக்குநிலை என்றார் ஆசிரியர் 'வேலை நோக்கு தலாவது, விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல்' என விளக்குவர் இளம்பூரணர். வேலினோக்கிய விளக்குநிலை’ என்பது நச்சினார்க்கினியர் உரையிற் கண்ட பாடமாகும்.

வாயுறை வாழ்த்தாவது வேம்பினையும் கடுவினையும் போன்ற கடுஞ்சொற்களைத் தடுத்தலின்றி, எதிர்காலத்திற் பெரும்பயன் விளைக்கும் என்ற நல்ல நோக்கத்துடன் பாதுகாவற் சொல்லால் மெய்யறிவித்தலாகும்.

செவியறிவுறு உவாவது, பெரியோர் நடுவண் பெருக்கமின்றிப் பணிந்து ஒழுகுதல் கடன் என அறிவுறுத்துவதாகும்.

புறநிலை வாழ்த்தாவது, நின்னால் வழிபடப்பெறுந் தெய்வம் நின்னைப் புறங்காப்பக் குற்றந்தீர்ந்த செல்வத்தோடு வழிவழி யாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்துவதாகும்.

கைக்கிளை-ஒருமருங்கு பற்றிய கேண்மை; அஃதாவது காதற்கேண்மையினை விரும்புதற்குரிய ஒருவன் ஒருத்தி என்னும் இருவருள் ஒருவரிடத்தேமட்டும் வெளிப்பட்டுத் தோன்றும் காமவுணர்வு. இஃது ஒருதலைக்காமம் எனவும் வழங்கப்படும். இவ்வுணர்வு ஆண், பெண் இருதிறத்தார்கண்ணும் தனித்தனியே அரும்பித் தோன்றுதலின் இவ்விருதிறமும் அடங்கக் கைக்கிளை வகை" என்றார் ஆசிரியர். இவ்விருதிறக் கைக்கிளையையும் புறப்பொருள் வெண்பாமாலை கைக்கிளைப் படலத்தில் ஆண்பாற் கூற்று பெண்பாற்கூற்று என ஐயனாரிதனார் விரித்துக்கூறி யுள்ளமை காணலாம்,