பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/357

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கூ0 兹.五-6h

முப்பாலோருட் கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின் கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவார்; அது விறலாகலின் அவ் விறல்பட ஆடுவாளை விறலியென்றார். இவளுக்குஞ் சாதிவரையறை யின்மையிற் பின்வைத்தார். பாணரும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் பண்டைப்பாணரு மெனப் பலராம். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம். விறவிக்கு அன்ன தொரு தொழில் வேறுபாடின்றித் தொழிலொன்றாகவின் விறலி யென ஒருமையாற் கூறினார்.

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்-இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்டகாட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழி யாகிய செல்வத்தை யாண்டுத் திரிந்து பெறாதார்க்கு இன்ன விடத்தே சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறு பாடும்;

பக்கமென்றதனானே அச் செய்யுட்களைக் கூத்தராற்றுப் படை பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை விறலியாற்றுப் படை முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனுார்ப் பண்பு முதலியனவுங் கூறுதலுங் கொள்க.

கூத்தராற்றுப்படை தடுமாறு தொழிலாகாமற் கூத்தரை ஆற்றுப் படுத்தென விரிக்க. ஏனையவும் அன்ன.

விலக்கியற் கூத்து என்றது, வேந்து விலக்கு, படை விலக்கு , ஊர்விலக்கு என்னும் விலக்குக்களாகிய பாட்டுக்களுக்கு உறுப்பாய் வருவனவற்றுடனே பொருந்த அமைந்த பலவகைப் புற நடங்களை. கானக்கூத்து-காட்டகத்து வேட்டுவர் ஆடுங் கூத்து, கழாய்க் கூத்து-இருபக்கத்தும் மூங்கிலை நாட்டிக் கயிற் றின் நடந் தாடுங் கூத்து ; இது விநோதக்கத்துள் ஒன்றாகியகலி நடம் என்பதாகும். இ ைசப்பான ர்-மிடற் றிசையில் வல்லவர். மண்டிைப்பானர்-மண்டையெனப் படும் மட்கலத்தையேந்திப் பிச்சையேற்று இசைபாடுவோர். யாழ்ப்பானர்-யாழ் என் னும் நரம்புக் கருவியை வாசித்து இசை வளர்ப்போர். -

1. தடுமாறு தொழில; துே, முன் னும் பின்னும் நின்ற பெயர்கள் இரண்டனுள் ஒன் ர ற்கே யுரித் தாய் நில்லாது ஒருகால் வினை முதற் பெயரோடும் ஒருகால் செயப்படுபொருளோடும் சென்று தடுமாறும் தொழில். புலிகொல்யானை: என் புழி நடுவே நின்ற கொல்’ என் னுந் தொழிற்சொல் புலியைக் கொன்ற யானை என இரண்டாமுருபு விரிக்குமிடத்துப் பின்னு:ள்ள யானை யின் தொழி லாகவும் புலியாற்கொல்லப்பட்ட யானை' என மூன்றாமுருபு விரிக்குமிடத்து முன் னுள்ள புலியின் தொழிலாகவும் தடு மாறி வருதலின் தடுமாறு தொழிலாயிற்று.

—23