பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணை இயல்- நுாற்பாக శ్లో:

நிலத்தொடு முந்துநூல்கண்டு முறைப்பட வெண்ணிப் புலம் தொகுத்த தொல்காப்பியரின் கருத்தைப் பேணி, அகப்புறத் தமிழ்ப்பழஞ் செய்யுண் மரபுகளுடன் முரணாவாறு, தமிழர் ஒழுக்கமுறை கூறும் இந்நூற் சூத்திரங்களின் உண்மைப்பொருள். அவ்வவற்றின் சொற்றொடரோடு அமைவுபெற நடுநிலையிலாய்ந் தறிய முயலுபவருக்குத் தெளிதல் எளிதாம். இதற்கு மாறாகத் தமிழகத்தின் புறத்தவர் வழக்கவொழுக்கங்களைப் புகுத்தித் தமிழர் பொருளியற் கூற்றுக்களுக்கு விளக்கம் காண முயல்வது கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇயற் றாய், பிழையொடு பீழை விளைப்பதாகும்.

பாரதியார்

கருத்து :- இது, குறிஞ்சிக்குப் புறனாவது வெட்சியென் பதையும், அதன் துறைவகை இனைத்து இத்துணைத்து என்பதை யும் கூறுகிறது.

பொருள் :- அகத்திணை மருங்கின் அரில்தட உணர்ந்தோக் முற்கூறிய அகவொழுக்கம் பற்றிய இயல் வகை முறைகளைப் பிழையற நன்கறிந்தோர்; புறத்திணை இலக்கணந் திறம்படக் கிளப்பின்- புற ஒழுக்க இயல் வகை முறைகளைத் தெளிவுபட வகுத்துரைப்பின்; வெட்சிதானே குறிஞ்சியது புறனே-வெட்சித் திணை குறிஞ்சியெனும் அகத்திணைக்குப் புறனாகும்; உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே-அவ்வெட்சித்தினை அச்சம் விளைக்கும் தோற்றமுடைய பதினான்கு துறைவகை கொள்ளும்.

குறிப்பு :- இதில் ஏகார மிரண்டனுள், முன்னையது. வெட்சியைப் புறத்திணை ஏழில் பிறவற்றினின்றும் பிரித்து விலக் குதலால், பிரிநிலையாம்; பின்னையது தேற்றம்; அசையுமாம். அரில் தப உணர்ந்தோர்.கிளப்பின் என்ற எச்சக்குறிப்பால், அகத்திணைகளினியல்பை ஐயந் திரிபு கெட அறிந்தார்க்கன்றி மற்றவர்க்கு அகத்திணைகளொடு தனித்தனி யியைபுடைய புறத் திணைகளினியல் திறம்படக் கிளத்தல் கூடாமை சுட்டப்பட்டது. எனவே, புறத்தினைகளெல்லாம் முறையே ஒவ்வோர் அகத் திணைக் கியைபுடையவாதலும், அதனால் அகத்திற் போலவே புறத்தினும் திணை ஏழா யமைதலும் மரபென்பதும் வலியுறுத்தப் பட்டது.

இனி, வெட்சி குறிஞ்சிக்குப் புறனாமாறு:- காதல் கண்ணிய அனைத்தக வொழுக்கங்களுக்கும் குறிஞ்சி முதலாதல்