பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினையியல் நூற்பா கூ0 க. அ. இ.

லும் பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின்கண் தோன்றிய நிமித்தம்; ஒர்த்து நின்றுழிக்கேட்ட வாய்ப்புள்ளும் ஒரிக்குர லுள்ளிட்டனவுங் கழுதுடன் குழிஇய குரல்பற்றலும் வெஞ்சுடர் மண்டிலத்துக் கவந்தம் வீழ்தலும் அதன்கண் துளை தோன்றுதலுந் தண் சுடர் மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றிய நிமித்தம்."

உவகை. அன்பு இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு நிகழ்த்தினான் ஒரு பாடாண்டலைவனது வாழ்க்கை நாளிற்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சி அவற்குத் தீங்கின்றாகவென்று ஒம்படை கூறுதலின் அது காலங்கண்ணிய ஒம்படையாயிற்று. எஞ்ஞான்றுந் தன் சுற்றத்து இடும்பை தீர்த்தானொருவற்கு இன்னாங்கு வந்துழிக் கூறுதலின், இற்றைஞான்று பரிசிலின் றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினானாமாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று. இவன் இறத்தலான் உலகுபடுந் துயரமும் உளதாகக் கூறலிற் சிறந்த புகழுங் கூறிற்று.

'நெல்லரியு மிருந்தொழுவர்” என்னும் (உச) புறப்பாட்டி னுள் நின்று நிலைஇயர்நின் னாண்மீன்' என அவனாளிற்கு முற் கூறியவாற்றான் ஒரிடையூறு கண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஒம்படை கூறியது.

உதாரணம் :

'ஆடிய லழற்குட்டத்து' (புறம்-உஉ கூ)

இதனுட் பாடாண்டலைவனது நாண்மீனை வீழ்மீன் நலிந்

தமை பற்றிக் கூறியது.

'இருமுந்நீர்க் குட்டமும்’ இப் புறப்பாட்டும் அது.

1. பிறந்த நாண்மீன் என்றது, பாட்டுடைத் தலைவன் பிறந்த நட்சத் திரம், ಟ್ವೆಹಣ; என்றது செவ்வாய் முதலிய கிரகங்களை. வீழ்மீன். எரிந்து விழும் நட்சத்திரம். புதுப்புள் வருதலாவது, ஒரு நிலத்தில் முன்னர் இல்லாத் பறவை வந்து சேர்தல்.

பழம் புள் போதலாவது, ஒரு நிலத்தில் நெடுங்காலமாகப் பயின்று வாழ்ந்த பழைய பறவை அந்நிலத்தை விட்டு நீங்கிச் செல்லுதல்.

பொழுதன் றிக் கூகை குழறல்-காலமல்லாத காலத்திற் கோட்டான் கத்துதல்.

ஒர்த்து நின்றுழிக் கேட்ட வாய்ப்புள் என்றது, நற்சொல் எழுதல் வேண்டும் ஒன்னும் நோக்குடன், அதனை எதிர்பார்த்து நின்ற நிலையில் தோன்றிச் செவி யிற் சேர்ந்த நற்சொல். இது விரிச்சியெனவும் கூறப்படும்.

o ஒரிக்குரல்-கரியின் ளைளை க்குரல். கழுது-பேய். வெஞ்சுடர் மண்டிலம்೯೬೯ శ్రీశ్రీ : கவந்தம் வீழ்தலாவது, தலையில்லாக் குறையுடல் வீழ்தல் புே:ன்றதொரு குறையுண்டாதல். துளை-புள்ளி. தண் சுடர் மண்டிலமாவது சந்திரன்.

2. இன்னாங்கு-துன்பம்,