பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கூ0 五_脑_矿

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே-உலகத்துத் தோன்றும் வழக்கினது கருத் தினானே மூன்று காலத்தோடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறிவருகின்ற பாடாண்டிணை என்றவாறு.

என்றது, இவ்வழக்கியல் காலவேற்றுமைபற்றி வேறுபடுமா யின், அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்பதுணர்த்தி யவாறு.

அவை, பகைவர் நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம், அதுவன்றிப் பொருள் கருதாது பாதுகாவாதான் நிரையைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த இடையாய அறம், அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடல் நிகழினும், அஃது அதனினு மிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப் பகைவன் போற்றாத நாட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும் பொருள் வருவாய்பற்றிச் சேறலும், வஞ்சித்துச் சேறலும் போல்வன ஒன்றனின் ஒன்றிழிந்த ஞாலத்து நடக்கைக் குறிப்பு: மாற்றரசன் சிேம்மியவழி ஆற்றாதோன் அடைத்திருத்தலும், அரசியலாயினும் அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந், தனக்கு உதவிவர வேண்டியிருத்தலும், ஆற்றலன்றி ஆக்கங்கருதாது காத்தேயிருத்த இலும் ஒன்றனினொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு.

இனி வாகைக்குப் பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க. காஞ்சிக்கும் அவரவர் அறி விற்கேற்ற நிலையாமை கொள்க. உயிரும் உடம்பும் பொருளு மென்ற மூன்றும்பற்றி இது பாடாண்டிணையுட் கூறினார்: எல்லாத்தினைக்கும் புறனடையாதல் வேண்டி இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலை இடை கடைகோடலும், அறுமுறை வாழ்த்

1. நடக்கை-வழக்கு.

2. வாகைத்திணை யில் அறுவகைப்பட்ட பார்ப்பனப்புக்கம் ஐவகைமரபின் அரசர் பக்கம், இருமூன்று மரபின் ஏனோர்பக்கம் என அந்தணர் அரசர் வணிகச் வேளாளர் ஆகிய நாற்கு லத்தார்க்கும் உரிய ஒழுகலாறுகளையே முறையே ஆறு, ஐந்து ஆறு, ஆறு என ஆசிரியர் வகுத்துக் கூறினார் ஆயினும் உலக வழக்கின் கண் நடைபெற்று வரும் இவ்வொழுகலாறுகள் காலவேற்றுமை பற்றி வேறுபடு தலும் உண்டு எ ன் பார். ‘இனி வ: கைக்குப் பார்ப்பனவொழுக்க முதலியன நான் கற்கும் வேறுபட வருதலுங் கொள்க’ என்றார் நச்சினார்க்கினியர்.

3. உயிர் நிலையாமை, யாக்கை நிலையா மை, பொருள் நிலையாமை எனப் பல்வேறு நிலையாமைகளை உள்ளவாறு அறிவோர் அறிவு நிலைக்கேற்ப அவ்வ வற்றின் நிலையாமையினை எடுத்துரைத்தல் காஞ்சித்தினை யாம் என்பார், *காஞ்சிக்கும் உயிரும் உடம்பும் பொருளும் என்ற மூன்றும் பற்றி அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க’ என்றார். -