பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கூ0 Rడ 5ఫ్

தரும்புரவலரைத் தேடிவரும் இரவலனுக்கு) வழியிடையில்தான் பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை மற்றவனுக்குத் தெரிவித்துத், தனக்களித்த புரவலன்பாற் சென்றுபெறச் சொல்லும் பகுதியும்) இதில்,கூத்தராற்றுப்படைக்குமலைபடுகடாமும்,பாணராற்றுப் ப ைட க் கு ச் சிறுபாண்-பெரும்பாண்பாட்டுக்களும், பொரு நராற்றுப்படைக்கு முடத்தாமக் கண்ணியார் கரிகாலனைப் பாடிய பொருநராற்றுப்படைச் செய்யுளும், விறலியாற்றுப்படைக்குப் புறநானூற்று 105, 33-பாட்டுக்களும் எடுத்துக்காட்டாகும்.

(3) சிறந்த நாளினிற் செற்ற நீக்கிப் பிறந்த நாள் வயிற் பெரு மங்கலமும்-பிறந்த வெள்ளணி நன்னாளில் சினமகற்றிச் சிறந்த பெருநாள் விழவயரும் பெருமங்கலம் என்னும் வெள்ளணி விழாவும்;

(பெருமங்கலம்-வெள்ளணி என்னும் பிறந்த நாள் விழா. அந் நாளில் வெள்ளையணிதலால், அ.. தப்பெயர் பெற்றது. இகழும் பகைவரைக் கறுத்தலும் தவறு செய்தாரை ஒறுத்தலும் வெள்ளணி விழாவொடு கொள்ளாத சினமாதலின் அவற்றை விலக்கிச், சிறைவீடு கொடை முதலிய சிறந்தன செய்வதே முறை யாதவிதிற் சுட்டப்படுந்துறையாகும்.)

(4) சிறந்த கீர்த்தி மண்ணு மங்கலமும்-முடிபுனைந்த விழவின் நீராட்டு மங்கலமும்;

(வடநூல்களிலும் இது, "பட்டாபிசேக உத்சவம்' எனப் பாராட்டப்படுகிறது.)

(3) நடைமிகுத் தேத்திய குடைநிழல் மரபும்-உலகிய லொழுக்குயர்த்தும் புகழ்பெற்ற வேந்தனது குளிர்ந்த குடைநிழல் முறைமையும்,

(6) மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும்-பகைவர் பால் கொற்றங்கருதிக் கொண்டாடும் வாள் நீராட்டு மங்கலவிழாவும்:

(7) மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் கூநீண்டு நிலைத்த பகையரனெறிது பாழ்செய்து நீராடும் மறவிழவும்:

(முன் உழிஞைத்துறையாகச் சுட்டிய இகன் மதிற்குடுமி கொண்ட மண்ணுமங்கலம் கணிலையழியாது கைப்பற்றிய ನೌgar இப்பாடாண்துறை, பற்றாது பகையரனெறிந்தழித்துப் பாழ்செய்த களியாட்டைக் குறிப்பதால் இது முன்னதின்வேறாதல் வெளிப்படை. இங்கு மங்கலம் மகிழ் கூரும் விழவைக் குறிக்கும். மண்ணு விழவெல்லாம் விழவயர்வார் நீராடித் தொடங்குமரபு