பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

போல, அமர்கொள்மரபின் புறத்திணைகளெல்லாம் வெட்சியைக் கொண்டு துவங்குதலானும், குறிஞ்சியும் வெட்சியும் ஒருங்கே களவில் நிகழ்வ வாதலானும், ஒழுக்க முறையால் வெட்சி குறிஞ் சிக்குப் புறனாயிற்று. இனி, நிரை மேயும் மலைச்சார்பு களவிற் கூடும் குறிஞ்சிக்கும் களவில் ஆதந்தோம்பும் வெட்சிக்கும் சிறந் துரியதாகலும், நள்ளிரா இவ்வீரொழுக்கங்களுக்கும் ஏற்புடைத் தாகலும், இடத்தானும் காலத்தானும், இவற்றிடை ஒரு புடை யியைபுடைமை எய்துவித்தலானும் வெட்சி குறிஞ்சிக்குப் புறனா யமையும்.

இன்னும், மக்களின் அக ஒழுக்கம் ஏழாதல் போல, அவற் றிற்கு இயலியைபுடைய அவர்தம் புறவொழுக்கமும் எழுதினை யென வகைபெற வைப்பதே பழைய மரபாதலின், அகத்திணை யியல்வகைகளை நன்கறிந்தார்க்கன்றி, புறத்திணைகளும் அவற் றின் துறைமுறைகளும் இனிது விளங்கா எனற்கு அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர் புறத்திணை யிலக்கனந் திறப் படக் கிடப்பின் என்றிப் புறத்திணை முதற் சூத்திரத்துவக்கத்திற் கூறப்பட்டது. எனவே, இவ்வாறு அகத்தினை ஏழொடு புறத், திணை யேழும் யாப்புற வுடையதாகக் கொள்ளுவதே அடிப்பட்ட தமிழ்மரபெனத் தெளியவைப்பதால், அத்தொடர்பு தொலைத் துப் புறத்திணைகள் பன்னிரெண்டென்னும் பிற்காலக் கொள்கை பழவழக்கொடு முரணு மிழுக்காதல் தேறப்படும்.

வெட்சியின் துறைகள் வேந்து விடு முனைஞ ரால் "மறனுடை மரபில்’ நிகழ்தலின், போர் பயிலாத நிரை காக்கும் ஆயரும் அயலாரும் அஞ்சுதல் இயல்பாம். ஆதலான், வெட்சித் துறைகள் உட்குவரத் தோன்றும் எனப்பட்டன.

ஆய்வுரை :

ஆசிரியர் தொல்காப்பியனார் மக்கட்குலத்தார்க்கே சிறப் புரிமையுடைய ஒழுகலாற்றினை அகம் எனவும் புறம் எனவும் இரு கூறுகளாகப் பகுத்து இலக்கணங் கூறியுள்ளார். பின்வந்த இலக்கண ஆசிரியர்கள் அகம் புறம் என்னும் அவ்விரு பகுதி களையும் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகப் பகுத்து இலக்கணங் கூறினர்.

அகம் புறம் என்னும் இருவகைத் திணைப்பகுப்பே தொன்மை யுடையதென்பது,