பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

満。読む தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

பற்றிய குறிப்பு: எனவே, விழவுகள் மண்ணுமங்கல மெனப் பெறுதலறிக.)

(8) பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்--இரவலர் புரவலன் தலைவாயிலை யணுகிப் புகழ்ந்து பரிசில் கேட்கும் பெற்றியும்;

(கடைக்கூட்டு-தலைக்கடை சேர்தல். கடைஇய என்பது கடாவிய என்பதன் செய்யுட் சொல்; கடாவல்-கேட்டல்)

(9) பெற்றபின்னரும் பெருவளணேத்தி நடைவயிற்றோன்றும் இருவகை விடையும்-பரிசில் பெற்றபின்னும் (பெறுமுன் ஏத்தியது போலவே) பெற்றோன் ஈந்தோனை மீக்கூறிப்புகழ்ந்து இரவலன் தானே விடைவேண்டலும் அவனுக்குப் புரவலன் விடை தரலும் ஆகிய உலகவழக்கில் பயின்றுவரு மிருவகை விடைகளும்;

பொருதராற்றுப்படை வரி 118-129 இவ்வடிகளில், பரிசிலன் பன்னாள் கரிகாற் புரவலனோடிருந்து, தனதுார்செல்ல விடை கேட்க அவன் பிரிவுக்கு வருந்திப் பின்னும் அவன் வறுமை யும் வேட்கையும் தீர ஈந்தனுப்பியது கூறுதலால் இது இரவலன் விடை கேட்குந் துறையாதல் காண்க.

(10) அச்சமும் உவகையும் எச்சமின்றி நாளும் புள்ளும் பிறவற்றினிமித்தமும் காலங்கண்ணிய ஒம்படை உளப்படநான்னாளும் நல்லகுறி (வாய்ப்புள்) நற்சொல் (விரிச்சி) முதலிய மற்றைய வாய்ப்புக்களும் கொண்டு, தலைவனுக்கு நேரும் தீமைக்கச்சமும் நன்மைக்கு மகிழ்வும் கூர்ந்து கவனக்குறைவின்றி ஆய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக்கூறும் வாழ்த்தடங்க;

புறம் 41-ல் உற்கமுதலியன பகைவருக்குத் தீது சுட்டும் வாய்ப்புள் (உற்பாதம்) அவற்றை நோக்கிப் பகைவர்மேற் கிள்ளி படையெடுத்துச் செல்ல அவன்பகைவர் அஞ்சித் தத்தம் புதல் வரை முத்திமனக்கலக்கத்தை மனைவிமார்க்கு மறைப்பர். அந் நிலையிற் காற்றுக்கூடிய நெருப்புப்போல் அவன் தகைவாரின்றி விரைந்து சென்று வென்று வீறெய்தப் பகைவர்நாடு பெருங்கலக் குறும் என்று, அவன் வென்றிப் புகழும் அவன் மாற்றார் நாடழி பிரக்கமும் கூறுதலால் இது கொற்றவள்ளைப்பாடாணாயிற்று. "மண்திணிந்த நிலனும்’ எனும் புறப்பாட்டில்,

பாஅல் புளிப்பி னும்பக விருளினும்

நடுக்கின்றி நிலியேகோ வத்தை, அடுக்கத்து

பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே (புறம்-உ)