பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/372

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


க.இ2. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஆற்றுப்படுத்தின பகுதியும் (வேந்தன் பகைவர் திறத்துத் தான்) நாள்தோறும் கொண்டுள்ள செற்றத்தை நீக்கித் தான் பிறந்த சிறப்புடைய நாளிலே கொண்டாடுதற்குரிய வெள்ளணி விழாவாகிய நாண்மங்கலமும், (தான் (91+ புனைந்த தன்னாளை ஆண்டுதோறும் கொண்டாடும் நிலையில் நிகழும்) மிகு புகழாற் சிறந்த புண்ணிய நன்னீராட்டு மங்கலமும், (குடி மக்களது நல்லொழுக்க வாழ்க்கையினை உயர்த்துப் புகழ்தற்குக் காரணமாகிய அரசனது (செங்கோல் முறைமையாகிய) குடை நிழல் மரபும், மாட்சிமையில்லாத பகைவரை வென்றடக்குதல் கருதி அரசனது வாட்படையினை நீராட்டி வழிபடுதலாகிய வாண்மங்கலமும், பகைமன்னரது நிலை பெற்ற மதிலையழித்து நீராடும் மண்ணுமங்கலமும், (கூத்தர் பாணர் முதலிய பரிசிலர் தத்தம் பதிகட்கு விரைந்து செல்லும் வேட்கையினராய்த் தாம் பெறுதற்குரிய) பரிசிற்பொருளை வினவி நிற்றலாகிய கடைக் கூட்டு நிலையும், பரிசில் பெற்ற பின்னரும் தாம் பெற்றுள்ள மிக்க வளங்களைப் பாராட்டி (த் தம்மூர்க்குப் போதல் வேண்டும் எனக் கூறித் தாமே விடை பெற்றுச் செல்லுதலும் மன்னனால் விடை யளிக்கப்பெற்றுச் செல்லுதலும் என உலக நடையிற் காணப் படும் இருவகை விடையும், நாளும் பறவையும் பிறவுமாக உலகியலிற் குறிக்கப்படும் பல்வேறு நிமித்தங்களாற் பாட்டுடைத் தலைவற்குத் தோன்றவிருக்கும் தீமைகளைக் கருதிய நிலையில் தம்முள்ளத்தே தோன்றும் அச்சமும் நன்மைகளைக் கருதிய நிலை யில் தோன்றும் உவகையும் நீங்குதலின்றிச் சென்ற காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் ஆகிய முக்காலத்தும் தீங்கின்றி வாழ்தல்வேண்டும் என வாழ்த்தும் ஒம்படையும் உட்பட இவ்வுலகத்து நிலைபெற்றுவரும் உலகியலொழுகலாற்றினையுளங் கொண்ட புலவரது மனக்குறிப்பினாலே இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்தொடும் பொருந்தக் கருதும் வண்ணம் அமைந்ததுறைகள் பாடாண்திணைக்கு உரியவாக வரும். எ-று. நல்லிசை என்றது நல்ல புகழைப் பெறுதற்குரிய செயலை, கருதிய-செய்தல் வேண்டி; செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கருதுதல்-ஆராய்ந்து முடித்தல். கிடைத்தல்துயிலல். சூதர்-நின்றேத்துவோர். துயிலெடை-துயிலினின்றும் எழுப்புதல்; பள்ளியெழுச்சி. நடை-உலகியலொழுகலாறு. கண் ணுதல் கருதுதல். ஒம்படை-தீங்கின்றிப் பாதுகாக்கும் கருத் துடன் கூறப்படும் உரை. நடக்கை-உலக நடை. குறிப்பு என்றது