பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/373

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத் திணையியல் நூற்பா உ0. உஇங்

பாடும் புலவரது உளக்குறிப்பினை. காலம் மூன்றொடும் கருதி வருதலாவது, சென்றகாலத்துத்திறமும் நிகழ்காலத்து நிலைமை யும் எதிர்காலத்துச் சிறப்பும் அமையப் பாடப்பெற்று வருதல். இங்ங்ணம் ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்தினை ஏழற்கும் புறனாய் நிகழும் புறத்திணைகள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை காஞ்சி, பாடாண் என ஏழுதிணைகளாகப் பகுத்துரைத்தார். பின்வந்த பன்னிருபடலமுடையாரும் அதன் வழிநூல் செய்த ஐயனாரிதனாரும் பகைவரது நாட்டின் ஆனிரையைக் கவர்தல் வெட்சி, அந்நிரையினைமீட்டல் கரந்தை, புகைவர்.நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சி, தம் மேல் வந்த பகைவர் சேனையை எதிர்நின்று தடுத்து நிறுத்தல் காஞ்சி, தம்முடைய மதிலைப் பகைவர் கைப்பற்றாதவாறு காத்துக்கொள்ளுதல் உழிஞை, இருதிறப் படைகளும், ஒருக்ளத்து எதிர் எதிர் நின்று பொருதல் தும்பை, பகைவரைப் போரில் வெல்லுதல் வாகை, மேற்குறித்த திணைகட்கெல்லாம் பொதுவா யுள்ள செயல்வகைகள் பொதுவியல், அகத்தின் வழுவிய ஒரு தலைக்காமம் கைக்கிளை, ஒவ்வாக்காமம் பெருந்திணை என இவ்வாறு பன்னிரு பகுதிகளாகப் புறத்திணையைப் பகுத்துரைத் தனர். இப்பன்னிரண்டனுள் முதலனவாகிய வெட்சி முதலாக வுள்ள ஏழும் புறம் எனவும், இறுதியிலுள்ள கைக்கிளை பெருந் தினை இரண்டும் அகப்புறம் எனவும், இடையிலுள்ள வாகை, பாடாண், பொதுவியல் என்ற மூன்றும் புறப்புறம் எனவும் பகுத்துரைக்கப் பெற்றன.

தொல்காப்பியனார் காலத்துக்குப் பன்னூறாண்டுகள் பிற் பட்டுத் தோன்றிய இப்பகுப்பு முறையினைத் தொல்காப்பியனார் காலத்தில் வழங்கிய தொன்மையுடையதாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் பிற்காலத்தில் இயற்றப்பெற்ற புறத்தினை யிலக்கணம் பன்னிருபடலம் என்பதாகும். வெட்சிப்படலம் முதல் பெருந்திணைப்படலம் ஈறாகப் பன்னிருபடலங்களின் தொகுப்பாக அமைந்த இந்நூல் அகத்தியர்க்கு மாணாக்கர்களாகிய தொல் காப்பியனார் முதலிய பன்னிருவராலும் முறையே ஒவ்வொரு படலமாக இயற்றிச் சேர்க்கப் பெற்றதென்றும், பன்னிரு படலத் துள் முதற்கண்ணுள்ள வெட்சிப் படலத்தை இயற்றியவர் அகத்தியர்க்கு முதல் மாணவராகிய தொல்காப்பியனார் என்றும் கதை புனைந்து வழங்கப்பெறுவதாயிற்று. இஃது உண்மை வரலாறு அன்று. பிற்காலத்திற் புனைந்துரைக்கப்பட்ட கதையே

جس24 سه