பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

繳.蠢羽 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

என்பதனையுணர்ந்த தொல்காப்பிய முதலுரையாசிரியராகிய இளம்பூரணர் 'பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல் காப்பியனார் செய்ததன்று எனத் தெளிவாகக் கூறி இக்கதையை மறுத்துள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும்.

அகத்தினையேழின் புறனாகிய புறத்திணைகளும் ஏழெனக் கொள்ளுதலே அகம் புறம் எனப் பகுத்த பண்டைத் தமிழியல் நூலார் தினைப்பகுப்புக்கு ஏற்புடையதாகும் எனவும் அதற்கு மாறாகப் புறத்திணைகள் பன்னிரண்டு எனக் கொள்ளுதல் பொருந்தாது எனவும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

எனினும் தொல்காப்பியத்தின் வழி நூல் செய்யப்புகுந்த பிற்கால இலக்கண ஆசிரியர்கள், முன்னோர் நூலின் வழிமருங்கு ஒத்துப் பின்னோன்வேண்டும் விகற்பங்கூறல்” என்னும் வழிநூல் சார்புநூல் இலக்கணமரபின்படி தாம் சொல்லக் கருதிய விகற் பங்களை மரபுநிலை திரியாதவாறு கூறுதல் ஏற்புடையதே யாதலின் பன்னிருபடலமுடையார் கொண்ட புறத்தினைப் பகுப்பினை மரபுநிலை திரியா மாட்சியவாகி, விரவும் பொரு ளாக அமைத்துக்கொள்ளுதலே முறையாகும்.

“அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை உழிஞைத் திணைகளின் மறுதலை வினையை வீற்றுவினையாதலும் வேற்றுப்பூச்சூடுதலும் ஆகிய வேறுபாடு பற்றி வேறுதிணையாக வைத்தெண்ணுதலும் இன்னோரன்னவை பிறவும் திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன எனவும் இவ்வுண்மையுணராதார் பன்னிருபடல் முதலிய நூல்களை வழிஇயின வென்றிகழ்ந்து..தமக்கு வேண்டி யவாறே கூறும்" எனவும் சிவஞான முனிவர் கூறும் அமைதி இங்ங்ணம் அமைத்துக்கொள்ளுதலை வற்புறுத்துங்கருத்தினதாதல் அறியத்தகுவதாகும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் கைக்கிளை முதல் பெருந் தினையிறாகவுள்ள ஏழு திணைகளும் அகத்திணையெனவே கொண்டனர் எனினும் அவ்வேழினுள்ளும் அகம் புறம் எனச் சிறப் பாகக் கொள்ளத்தக்கன முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என்னும் ஐந்தினைகளேயாதலின் அவற்றை மக்கள் நுதலிய