பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/375

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகினைந்திணை எனக் குறித்தார். அடியோர், வினைவலர் தலை மக்களாக அமைதல் அகன் ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைகளின்பாற்படும் என்பதனை,

"அடியோர் பாங்கினும் வினைவலர் பங்கினும் கடிவரையில புறத் தென்மனார் புலவர்'

(அகத்திணையியல்-உடு எனவரும் நூற்பாவிலும், ஏவன்மரபின் ஏனோரும் கைக்கிளை பெருந்திணைகளில் தலைமக்களாதற்குரியர் என்பதனை,

':ஏவன் மரபி னேனோரும் உரியர் ஆகிய நிலைமையவரும் அன்னர்'

(அகத்திணையியல்-உசு) என அடுத்துவரும் நூற்பாவிலும் தொல்காப்பியனார் குறித் துள்ளார். இங்ஙனம் அன்பின் ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைகளில் அடியோர், வினைவலர், ஏவன் மரபின் ஏனோர் தலைமக்களாகப் பாடப்பெறுதலுண்டு என்ப தற்குக் கலித்தொகையில் வரும் பாடல்களை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுத் தந்து விளக்கியுள்ளமை காணலாம். அகத் திணையொழுகலாறுபற்றிய இப்பாடல்கள் யாவும் அன்பின் ஐந்தினையெனக் கொள்ளப்படாது அவற்றின் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைகளின் பாற்படுவன என்பார், கடிவரை யிலபுறத்து என்றார் ஆசிரியர். புறத்து என்றமையால், அகத் திணையேழனுள் அகன் ஐந்திணைக்கு முன்னும் பின்னும் வைத் துரைக்கப்படும் கைக்கிளையும் பெருந்திணையும் அகன்ஐந் திணையின் புறம்’ என வழங்கப்படுதலுண்டு என்பதும் தொல் காப்பியனார்க்கு உடன்பாடாதல் புலனாம்.

'மக்கள் நுதலிய அகனைந்திணையும் சுட்டியொருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்" என விதித்த தொல்காப்பியனார், தலைமக்களது இயற்பெயர் சுட்டப்பெறுதல் புறத்திணை மருகில் அமைந்த கைக்கிளை பெருந் திணைக்கண் அன்றி அகத்திணைமருங்கில் அமைந்த கைக்கிளை பெருந்திணைக்கண் இல்லை என்பதனை,

புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே'

(ஆகத்திணை.இ.அ)