பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்தினை இயல்-நூற்பா க

அகத்திணை மருங்கின் அகில் தப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கண த் திறப்படக் கினப்பின் எனவரும் தொல்காப்பிய நூற்பாவில் அகத்திணை, புறத்திணை எனத் திணைப்பகுப்பு இரண்டே குறிக்கப்பட்டிருத்தலால் இனிது புலனாம். ஒரு தலைக் காமமாகிய கைக்கிளை, ஒத்த காமமாகிய அன்பின் ஐந்திணை, ஒவ்வாக் காமமாகிய பெருந்திணை ஆகிய அகத்திணை ஏழிற்கும் புறமாய் அவற்றோடு ஒருவாற்றால் தொடர்புடைய புறத்திணைகள் ஏழுள என்பதனையும், இப் பகுப்பு முறை முன்னைத் தமிழ்ச் சான்றோரால் வகுக்கப்பட்ட தொன்மையுடையது என்பதனையும்

'கைக்கிளை முதலாய்ப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதினை இயன்ப" எனவரும் நூற்பாவில் முற்படக்கிளந்த என்ற தொடராலும் என்ப' என்னும் சொற்குறிப்பாலும் தொல்காப்பியனார் குறித் துள்ளமை காணலாம்.

‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே' ‘வஞ்சி தானே முல்லையது புறனே? *உழிஞை தானே மருதத்துப் புறனே" 'தும்பை தானே நெய்தலது புறனே" 'வாகை தானே பாலையது புறனே’ "காஞ்சி தானே பெருந்திணைப் புறனே"

ப டாண் பகுதி கைக்கிளைப் புறனே எனவரும் தொல்காப்பியத் தொடர்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை, என்னும் அகத்திணை ஏழற்கும் முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை வாகை, காஞ்சி, பாடாண் என்பன புறமாம் என முறைப்பட வகுத்துள்ளமை காணலாம்.

இங்குச் சொல்லப்பட்ட புறத்திணை ஏழனுள் குறிஞ்சித் திணைப் புறனாகிய வெட்சித்திணை பகைவர் நாட்டுப் பசுக் கூட்டத்தினைக் களவிற் கவர்ந்து கொள்ளுதலும் அப் பசு நிரைக் குரியோர் அதனை மீட்டுக்கொள்ளுதலும் ஆகிய தொழில் வேறு பாடு குறித்து முறையே வெட்சி எனவும் கரந்தை எனவும் இருபெயர் பெறும். முல்லைத்திணைப் புறனாகிய வஞ்சித்திணை, மண்ணசை யாளன் ஆகிய வேந்தன்மேல் மற்றொரு வேந்தன் படையெடுத்துச்