பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


.ேஇ. தொல்காப்பியம் - பொருளதிகாரம்-உரை வளம்

திறப்பட மொழிந்து தெரிய விரித்து

முதற் பட எண்ணிய எழுதிணைக்கு முரீத்தே' எனத் தாமே (பன்னிருபடல நூலாசிரியர் தாமே) கூறுகின்றாரா தலின் மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக்கோடற் கண்ணும் (வெட்சியின் தொடக்கத்திலும்) கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்தெனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தையொழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டு தலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய வான்றோர் செய்யுட்கும்

உயர்ந்தோர் வழக்கி ற்கும் பொருந்த தென்க’ என்பது இளம்பூரணர் கூறும் மறுப்புரையாகும்.

மக்களைப் பொருளாகக் கொண்டு பாடப்பெறும் அகப்பொரு

ளொழுகலாறு பற்றிய அகத்தினைச் செய்யுட்களில் அவர் தம் இயற்பெயர் சுட்டப் பெறுதல் மரபன்று என்பதனை,

மக்கன் நு:தலிய அகனைத் தினையும்

சுட்டியொருவர் பெயர் கொளப் பெற அர்’ (அகத்.இ.அ) எனவரும் நூற்பாவில் குறித்த தொல்காப்பியனார், இங்ஙனம் இயற்பெயர் சுட்டப் பெறுதல் புறத்தினை மருங்கு எனப் புறத்தைச் சார்ந்து வரும் கைக்கிளை பெருந்திணைகளிலன்றி அகத்திணை மருங்கு” 6767 அகத்தைச் சார்ந்து வரும் கைக்கிளை பெருந்தினைச் செய்யுட்களில் இடம்பெறுதல் இல்லை என்பதனை,

'புறத்தினை மருங்கிற் பொருத்தி னல்லது

அகத்திணை மருங்கின் அளவுத லிலவே' (அகத்.டு எ) என மேல் அகத்திணையியல் இறுதியிற் கூறி, அகத்திணை யொடு தொடர்புடைய புறத்திணை யிலக்கணத்திற்குத் தோற்று வாய் செய்தார். இந்நூற்பாவில் புறத்திணை, அகத்திணை என்ற அளவில் அமையாது புறத்திணை மருங்கு அகத்திணை மருங்கு” எனத் தொல்காப்பியனார் விரித்துரைத்தலால் பின்னர்க் கூறப் படும் புறத்திணையைத் தழுவியும் முற்கூறிய அகத்திணையைத் தழுவியும் அவற்றின் பக்கத்தவாய் அமைந்த இருவேறு திணைப் பகுதிகள் இங்குத் தொல்காப்பியனாராற் சுட்டப்பட்டன என்பது உய்த்துணரப்படும். அகத்திணை மருங்கு என்றது கைக்கிளை