பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக 2.கி.

முதலாப் பெருந்திணையிறு வாய் முற்படக் கிளந்த எழுதினை களுள் நடுவண் ஐந்திணையெனப்படும் அகன் ஐந்தினைகளின் மருங்கே முன்னும் பின்னும் அமைந்த அகத்திணைகளாகிய கைக் கிளை பெருந்திணைகளை அன்பின் ஐந்தினையொழுகலாற்றின் தொடக்க நிலையாகிய கைக்கிளையும் முதிர்ந்த நிலையா.இது பெருந்தினையும் அகத்தினைகளேயாதலின் அவ்விருதிணைகளைக் குறித்துப் பாடல் சான்ற புலனெறி வழக்கிற் பாட்டுடைத் தலைவரது இயற்பெயரைச் சுட்டுதல் கூடாதெனவும் இத்திணை களில் இயற்பெயர் இடம்பெறுவதாயின் இவ்வொழுகலாறுடை யார் இன்னார் என்பது எல்லார்க்கும் புலனாக அவர்தம் அக வொழுகலாறு புறத்தினையொழுகலாறு போல் இன்னார் இன்னாராற் காதலிக்கப்பட்டு இத்தன்மையரானார் என உலகிற் புறத்தே பேசப்படும் நிலையினைப் பெறும் எனவும் இவ்வாறு உலகத்தார் பலர்க்கும் புலனாக இயற்பெயர் சார்த்திப் பாடப் படும் கைக்கிளை பெருந்திணைச் செய்யுட்கள் புறத்திணைச் சார்பின வாய்ப் புறத்திணைமருங்கு எனப்படும் எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையேழனுள் வைத்துப் பேசப்படும் கைக்கிளை பெருந்திணைகட்கும் புறத்திணைச் சார்புடைய கைக் கிளை பெருந்திணைகட்கும் இடையேயமைந்த வேறுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளமை காணலாம். எனவே ஆசிரியர் தொல்காப்பி யனாரால் அகத்திணைஏழனுள் வைத்து எண்ணப்படும் கைக்கிளை பெருந்திணை என்பன வேறு எனவும் புறத்திணைச் சார்புடை யனவாய்ப் பன்னிருபடலமுடையாராற் புறத்தினை பன்னிரண் டனுள் வைத்து எண்ணப்படும் கைக்கிளை பெருந்திணை என்பன வேறு எனவும்பிரித்துணர்தல் வேண்டும். இங்ஙனம் இருவர் நூற்கும் மாறுகோளில்லா நெறியில் அமைத்துக்கொள்ளுதலே காலந் தோறும் பல்வேறு பகுப்புடையவாய்க் கிளைத்து வளர்ந்து வரும் தமிழ்ப் பொருளிலக்கண இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்புடையதாகும்,

ஆய்வுரை

ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி என நிறுத்த முறையானே எழுத்ததிகாரத்துள் எழுத்திலக்கணமும் சொல்லதிகாரத்துள் சொல்லிலக்கணமும் உணர்த்திப் பொருளதிகாரத்தின் முதலியலாகிய அகத்திணை யியலுள் முற்பட இன்பப்பகுதியாகிய கைக்கிளை முதற்பெருந் திணை பீறாகவுள்ள அகத்திணைகள் ஏழின் பொது இலக்கணம்