பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


{_ష్ణా: தொல்காப்பியம்-பொருளதிகாரம் உரை வளம்

உணர்த்தினார். அதன்பின் அகத்திணைகளின் புறத்தனவாய் நிகழும் வெட்சி முதல் பாடாண்டிணை பீறாகவுள்ள புறப் பொரு வரிலக்கணம் உணர்த்துகின்றார். ஆதலால் இது புறத்திணையியல் என்னும் பெயருடையதாயிற்று. உள்ளத்து இன்பமே நுகரும் அகம் போல ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாராலும் உணரப்படுவதும் இஃது இவ்வாறு இருந்தது எனப் பிறர்க்கு எடுத் துரைக்கப்படுவதும் ஆகிய அறமும் பொருளும் பற்றிய ஒழுகலாறு புறம் எனப்படும். மனவுணர்வுடையராய மக்களது வாழ்க்கையில் அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுகலாறுகளைப் புறம் என்றது இடவாகுபெயர்.

ஒத்த காதலராகிய ஒருவன் ஒருத்தி யிருவர்க்கும் உரிய குடும்பவாழ்விலே அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றி னைக் கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என எழு திணைகளாகப் பகுத்தது போலவே மக்கட்குலத்தார் அனைவரும் மேற்கொள்ளுதற்குரிய உலகியலாகிய பொதுவாழ்க்கையில் அன் பெனும் பண்பின்வழிப்பட்டவாய் அறமும்மறமும் பற்றிப் புறத்தே நிகழும் செயல் முறைகளையும் வெட்சி முதல் ஏழுதிணைகளாகப் பகுத்துரைத்தல் பண்டைத் தமிழர்கள் கண்டுணர்த்திய பொருளி லக்கண மரபாகும்.

வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் இவ்வேழும் புறத்திணைகளாகும். இவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக் கிளை எனவரும் அகத்திணை ஏழினுக்கும் புறமாம் என்பர் தொல் காப்பியர். புணர்தல் இருத்தல் முதலிய அகத்தினையொழுக் கங்கள் தத்தமது நிலத்திற்குச் சிறப்புரிமையுடைய குறிஞ்சி, முல்லை முதலிய பூக்களாற் பெயர் பெற்றாற் போன்றே, அவற்றின் புறத்தவாகிய நிரைகோட்ல் மேற்செறல் முதலிய புறத் திணையொழுக்கங்களும் அவற்றை மேற்கொள்வோர் அடையாள மாகச் சூடுதற்குரிய வஞ்சி வெட்சி முதலிய பூக்களாற் பெயர் பெறுவனவாயின. அகத்திணைகளின் இலக்கணத்தினை உணர்ந் தார்க்கு அன்றி அவற்றின் புறத்தவாகிய புறத்தினையொழுக லாறுகளும் அவற்றின் துறைகளாகிய செயல்வகைகளும் இனிது விளங்கா ஆதலின் அகத்திணைகளின் பொதுவிலக்கணம் உணர்த்திய பின்னர்ப் புறத்திணையிலக்கணம் உணர்த்துகின்றார் ஆதலின் இஃது அகத்திணையியலின்யின் வைக்கப்பெற்றது.