பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக உடு

புறத்திணையியலிலுள்ள நூற்பாக்களை முப்பதாக இளம் பூரணரும், முப்பத்தாறாக நச்சினார்க்கினியரும் முப்பத்தைந்தாக நாவலர் சோமசுந்தரபாரதியாரும் பகுத்து உரைவரைந்துள்ளனர்.

நூ ற் பா. க

இது வெட்சித்திணையினியல்புரைத்து. அஃது இத்துனைத் துறையுடைத்தென்கிறது. (இ-ள்) அகத்திணைகளின்பாற்படும் ஒழுகலாறுகளைப் பிணக்கற வுணர்ந்தோர் அவற்றின் புறத்த வாகிய புறத்திணைகளின் இயல்பினை வகைபெறக் கூறுமிடத்து வெட்சி என்னும் திணை குறிஞ்சியென்னும் அகத்திணைக்குப் புறனாகும். அதுதான் (பகைப்புலத்தார்) நடுக்கமுறத்தோன்றும் பதினான்கு துறைகளை யுடையதாகும்.

பகைவரது நாட்டின்மேற் படையொடு சென்று போர் செய்யக் கருதிய வேந்தன், அந்நாட்டில் வாழும் அறவோராகிய அந்தணர், மகளிர், பிணியாளர் முதலிய தீங்கு செய்யத்தகாத மக்களைப் போரால் விளையும் இடர்களினின்றும் விலக்கி உய்வித்தல் வேண்டி, யாம் போர் கருதி நும் நாட்டிற் புகுகின் றோம். நீவிர் நுமக்குப் பாதுகாவலான இடங்களை நாடிச் செல்லுமின் என இவ்வாறு அவர்களுக்கு அறிவித்தலும், அவ் அறிவிப்பினைக் கேட்டுணர்ந்து வெளியே செல்லும் மனவுணர்வு வாய்க்கப் பெறாத பகைவர் நாட்டுப் பசுக்கூட்டங்களை ஒருவரும் அறியாதபடி நள்ளிரவில் தன் படைவீரர்களை அனுப்பிக் களவிற் கவர்ந்துவரச் செய்து பாதுகாத்தலும் அறநெறி வழாது மேற் கொள்ளுதற்குரிய பண்டைத் தமிழர் போர் முறையாகும். அம் முறைப்படி வேந்தனால் ஏவப்பட்ட படை மறவர்கள், நள்ளிரவிற் பகைவரது நாட்டிற் புகுந்து அங்குள்ள பசு நிரைகளைக் களவி னாற் கவர்ந்து தம் நாட்டிற் கொணர்ந்து பாதுகாக்குஞ் செயல் வெட்சி என்னும் புறத்தினையாகும். இவ்வாறு ஆனிரைகளைக் கவர்தலை மேற்கொண்ட படைமறவர் தமது போர் முறையைப் பகைவேந்தருக்கு அறிவிக்கும் அடையாளமாக வெட்சிப் பூவைச் சூடிச் செல்லுதல் மரபு. அதனால் போரின் தொடக்க நிகழ்ச்சி யாகிய இச்செயல் வெட்சி எனப் பெயர் பெறுவதாயிற்று. வெட்சி என்பது குடும் பூவாற் பெற்ற பெயர்; வஞ்சி முதலியனவும் வீரர் சூடும் பூவாற் பெற்ற பெயர்களே.

வெட்சி என்னும் திணை குறிஞ்சி என்னும் அகத்திணைக்குப் புறனாகும் என்றது, அவ்விருதிணைக்கும் இடையேயமைந்த மலை, நிலம், கங்குற்பொழுது, களவு தொழில் ஆகியவற்றால் உளவாழ