பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணை இயல்-நூற்பாக G. GF

'ஒத்த சூத்திசம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈசைங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புனரின் நூலென மொழிய துணங்குமொழிப் புலவர்'

(தொல். மரபு-க 00)

எனவும்,

சிதை வெனப் படும் அவை வசையத நாடின் கூறியது கூறல் மாறு கொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூற ல மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியான் இழுக்கக் கூறல் தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கொள் இன்மை அன்ன பிற வும் அவற்று விரி வாகும்’

(தொல், மரபு-ககC) எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக் கூறல், மிகைபடக்கூறல், பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னா னொரு பொருள் கருதிக்கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினா ரென வருமாகலான். (്ല.)

நச்சினார்க்கினியர்:

இது வெட்சியெனக் கூறிய புறத்திணைக்குப் பொது இலக் கணங் கூறுகின்றது.

(இ-ள்) வேந்து விடு முனைஞர்-வேந்தனால் விடப்பட்டு முனைப்புலங் காத்திருந்த தண் டத் தலைவர்: வேற்றுப் புலக்கள வின்-பகைநிலத்தே சென்று களவினாலே, ஆ தந்தோம்பல்

களவினாற் பசுநிரையைக் கவர்தல் என்பது, நாடாள் வேத் தனது ஆனை யைக் கடந்தபெருங்கு ற்றம தவின், அங்கனம் படைமறவர் தன்னுறுதொழிலாகப் பிறர் நாட்டுப் பசுக் கூட்டத்தினை க் கவர்வர் என்றதொரு விதிகூறு தல் மிகைபடக் கூறல் என்னுங் குற்றத்திற்கு இடந்தருமாதலால், பன்னிருபடலத்தில் தன்னு:று தொழிலையும் மின் னு றுதொழிலையும் ஒப்பக்கூறும் வெட்சிப்படலம் என்ற பகுதி யினைத் தன் னு று தொழிலையே விதித்த தொல்காப்பியனார் இயற்றினார் எனக் கூறுதல் பொருந்தாது என்பது இளம்பூரண ச் கருத்தாகும்.

1. முனைஞர்-முனைப்புலங் காக்கும் தண்டத் தலைவர். வேற்றுப்புலம்பகைநிலம், கள வின் -கள வி ை லே; இன்னுருபு ஏதுப்பொருளில் வந்தது. மே வல்-பொருந்துதல்: எ ன் து, ஈண்டு அன்பொடு பொருந்துதலை, மேவற்று, பொகுந்துதலை:டையது; குறிப்பு வினை முற்று. - -