பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.அ தொல்காப்பியம்-பொருளதிகாரம் உரைவளம்

மேவற்றாகும்-ஆநிரையைக் கொண்டுபோந்து பாதுகாத்தலைப் பொருந்துதலை யுடைத்தாகும் வெட்சித்திணை எ - று.

களவு நிகழ்கின்ற குறிஞ்சிப்பொருளாகிய கந்தருவமணம் வேத விதியானே இல்லறமாயினாற்போல இருபெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந் தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும் அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினாம் றாமே கொண்டுவந்து பாதுகாத்தலுந் தீதெனப்படாது அறமே யாம் என்றற்கு ஆ தந்தோம்ப லென்றார்."

அது,

"ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் (புறம்-க) எனச் சான்றோர் கூறியவாற்றா னுணர்க. மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்றற்கு மேவற்றாகுமென்றார். அகநாட்டன்றிப் புறஞ்சிறைப்பாடியில் ஆநிரை காக்குங் காவலரைக் கொன்றே நிரைகொள்ள வேண்டு தலின் ஊர் கொலையுங் கூறினார். வேந்துவிடு வினைஞர் என்னாது முனைஞர் என்ற தனானே முனைப்புலங் காத்திருந் தோர் தாமே சென்று நிரை கோடலும், குறுநிலமன்னர் நிரை கோடலும். ஏனை மறவர் முதலியோர் நிரைகோடலுமாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலுங் கொள்க. முன்னர் (தொல்பொ-புறத்க) வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவு கூறிய அத னானே. அகத்திற்கு ஏனைத் திணைக்கண்ணுங் களவு நிகழ்ந்தாற் போலப் புறத்திணை யேழற்குங் களவு நிகழுங்கொ லென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந் தோதினார். வேந்துவிடு முனைஞர் என்றமையான், இருபெரு வேந்தருந் தண்டத்தலைவரை ஏவி விடுவரென்றும், ஆ தந் தோம்பும் என்றதனாற் களவின்கட் கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்புமென்று, பொருள் கூறுமாறு சூத்திரஞ் செய்தா ராகலின், இருபெருவேந்தர் தண்டத்தலைவரும் அவரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினார்; ஆகவே இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும்

1. அன் பின் ஐந்திணைக் கள வாகிய குறிஞ்சியொழுக்கம் சான்றோர் போற்றும் மனையறத்திற்கு நிலைக்களுமானாற்போலப் பகைவர் நாட்டு ஆனிரை களைக் கள வினாற் கவர்ந்து கொண்டு பாதுகாத்தலும் அறத்தின் வழி நிகழும் போர்ச் செயல்களுக்கு நிலைக்களமாகும் என் பார் ஆதந்து ஓம்பல்” என்றார்,