பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்தினை இயல்-நூற்பாக ు.

மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் மீட்டல் கரந்தை' என்பரால் எனின், அதனையும் இச் சூத்திரத்தானும் வருகின்ற குத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக்கரந்தை என்பாரும் உளர் மீட்டலைக் கரந்தை யென்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனா காமை உணர்க. (களவி னென்பதற்குச் களவினானெனவுங் களவின்கனெனவும் இருபொருட்டாகக் கூறுதல் உய்த்துக் கொண்டுணர்த லென்னும் உத்தியாம். புறப்பொருட்குரிய அறனும் பொருளுங் கூறத்தொடங்கி, ஈண்டு அறத்தாற் பொரு ளிட்டுமாறுங் கூறினார்.

கருத்து : இது வெட்சித்திணையின் இயல் விளக்குகிறது. பொருள் : வேந்துவிடு முனைஞர்-மன்னரா லேவப் பெற்ற படை மறவர்; களவின் வேற்றுப்புல ஆதந்தோம்பல்-கரவால் பிறர் நிலத்து கவர்ந்து போந்து புறந் தருதலை; மேவற்றாகும்(அவ்வெட்சி) விரும்பும் தன்மைத்தாம்.

குறிப்பு : கொண்டபொருட் குறிப்பால் அவாய் நிலையாய் 'அவ் வெட்சி யென்பது கொள்ளப்பட்டது.

இனி, வெட்சி மறனுடை மரபில் அமர் துவக்கும் ஒழுக்க மாதலின், போர் விரும்பும் மன்ன ரேவலால் அது நிகழ்தற்பாற்று. பிற நாட்டொடு போர் தொடங்குதல் இறைமை முறையாய் மன்னர் பாலதே யாதலால், இப்போர்த் தொடக்கத்தினை அவராணைஅழித்தாதல் ஒருதலை அன்றியும், அது போர்க்குறி யாதலால், மன்னரேவினும், பொருந ரல்லாப் பிறர் மேற் கொள்ளற்பாற் றன்று. பிறர் நிரைகவர்தல் போர்த்தொடக்கம் குறியாமல் திருட்டின் பொருட்டாய்க் கருதப் பெறுமாகலின், இத் திணைக்கு மன்னர் பிறரை விலக்கித் தம் படைமறவரையே ஏவற்

1. பன்னிரு படலமுடையார் கொள்கையை ஒருவாற்றான் உடன்பட்டு மன்னுறு தொழிலல்லாத தன்னுறு தொழிலையும் ஏற்கும் முறையில் இவ்விளக்கம் அமைந்துள்ளது.

2. நிரை கோடலும் மீட்டலும் ஆகிய இருவகை ஒழுகலாறும் வெட்சித்தினை யென ஒரே திணையாய் அடங்கும் என்பதும் நிரை மீட்டோர் கரந்தை சூடுதல் பற்றி அந்நிகழ்ச்சி வெட்சித்தினை யுள் கரந்தை என்னும் துறையாய் அடங்கும் என்பதும் என்பது கருத்து.

3. உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தியாவது, ஒரு தொடரில் ஒரு பொருள் சொல்லியக்கால் அதன்கண்ணே மற்றொரு பொருள்ையுங் கொண்டறியு மாறு தோன்றச் செய்தல், “கள வின் ஆதந்தோம்பல்” என் புழிக் கள வின்: என்பதற்குக் களவினான் என மூன்றாம் வேற்றுமையுருபு விரித்து ஏதுப்பொருள் படவும், களவின் கண்’ என ஏழாம் வேற்றுமையுருபு விரித்து இடப் பொருள் படவும் உய்த்துக் கொண்டுணர வைத்தமையோர்க.