பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் لیست

பாக்கத்து விரிச்சி". (குறித்த பொருளின் பயன் அறிதற்குப் பாக்கத்துக்கண் நற்சொல் ஆய்தல்.

புடை கெடப் போகிய செலவு-பக்கம் கெடப் போகிய செலவு. பக்கங் கெடுதலாவது, மாற்றரசர் பக்கத்தாராகித் தம்மாட்டு ஒன்றொடு நிற்பார் அறியாமல் போதல் பக்கத்திலுள்ளாரைப் பக்கம் என்றார்.

புடை கெட ஒற்றின் ஆகிய வேயே-மாற்றரசர் பக்கத்துள்ளார் அறியாதவகை ஒற்றரால் ஆகிய ஒற்றுதலும்.

ஒற்று என்பது எவ்விடத்தும் வேண்டுமாயினும், ஆதி விளக்காக" இவ்வோத்தின் முதற்கண் வைத்தாரென்று கொள்க. வேய் புறம் முற்றின் ஆகிய புறத்து இறை-(அவ்வாறு) வேய்க்கப்பட்ட இடத்தின் புறத்தினைச் சூழ்தலான் ஆகிய புறத் திருக்கை.

வேய்' என்பது ஆகுபெயராய் அவ்விடத்தின்மேல் நின்றது. முற்றிய ஊர்கொலை (அவ்வாறு) சூழப்பட்ட ஊரை அழித்தல். ஆ கோள்-(ஆண்டுளதாகிய) நிரையைக் கோடல்.

பூசல் மாற்று" -(அவ்வாறு கொண்ட நிரையை மீட்டற்கு வந்தார் பொரும்) பூசல் மாற்றிப் பெயர்தல்.

நோய் இன்று உய்த்தல்".-(அவ்வாறு கொண்ட நிரையை) வருந்தாமல் உய்த்தல்,

நுவல்வழித் தோற்றம்’ தமர் கவன்று (சொல்லியவழித் தோன்றுதல்.

தந்து நிறை -(கொள்ளப்பட்ட நிரையைத்) தம் ஊரகத்துக் கொணர்ந்து நிறுத்தல்.

2. விரிச்சி என்பது நற்சொற்கேட்டல், புடை-பக்கம்; மாற்றார் பக்கத் தாராகித் தம் பக்கத்து ஒற்றாய் நிற்போர்.

3. ஆதிவிளக்கு என்பது, முதனிலைத்தீவகம் என்னும் அணி. 4. வேய்ப்புறம்-ஒற்றி அறியப்பட்ட இடம், முற்றுதல்-கு ழ்தல்; வளைத்தல். 5. பூசல்மாற்று என்பது நிரைகவர் தற்குச் சென்ற வெட்சியார் நி:ை மீட்டற்குத் தம்மைப் பின்தொடர்ந்து வந்த கரந்தையார் செய்யும் போரினை விலக்கிமீளுதல்.

6. நோயின்று உய்த்தல்- தாம்கொண்ட பசுநிரையினை வருத்தமின்றி நடத்திக் கொண்டுவருதல். இன்றி என்னும் வினையெச்சம் செய்யுளாதலின் ‘இன்று’ எனத் திரிந்து நின்றது.

7. நுவல்வழி-{தம்சுற்றத்தார் சொல்லியவிடத்து, தோற்றம்-( பசுநிரை யொடுவந்து) தோன்றுதல்.

8. தந்து நிறை-(பசுக்களைக்) கொணர்ந்து நிறுத்துதல் .