பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


茨二、安 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஆகோள் - நிரைகோடற்கு எழுந்தோர் எதிர் விலக்குவோர் இலராக நிரையகப்படுத்தி மீட்டலும்,நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை அற்றமின்றி மீட்டலும்:

தொடலைக் கரந்தையெனக் கரந்தை சூடினமை கூறினார் தன்னுறுதொழிலான் நிரைமீட்டலின்: இது பொதுவியற் கரந்தையிற் கூறுதும்.

பூசன்மாற்று நிரை கொண்டு போகின்றார் தம்பின்னே உளைத்தற்குரலோடு தொடர்ந்து சென்று ஆற்றிடைப் போர் செய்தோரை மீண்டு பூசலைமாற்றுதலும், நிரையை மீட்டுக் கொண்டு போகின்றோர் தம் பின்னர்வந்து போர் செய்தோரை மீண்டு நின்று பூசலை மாற்றுதலும்:

வெட்சிமறவர் வீழ்ந்தமை கேட்டுவிடாது பின்வந்தோன்பாடு கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று.

நோய் இன்று உய்த்தல்-நிரைகொண்டோர் அங்ங்னம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாங்கொண்ட நிறையினை இன்புறுத்திக் கொண்டுபோதலும் மீட்டோரும் அங்ங்னம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாம் மீட்ட நிரையினை இன்புறுத்திக் கொண்டு போதலும்;

நுவலுழித் தோற்றம் - பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத் தற்குக் காரணமான நிரைகொண்டோர் வரவும், ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரை மீட்டோர் வரவும்:

தந்து நிறை நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம் மூர்ப்புறத்துத் தந்துநிறுத்தலும், நிரைமீட்டோர் தாம்மீட்ட திரையினைத் தந்து நிறுத்தலும்;

பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாதீடாயிற்று; வேந்தனேவலாற்றாங் கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும் மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும் நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத் தலும்;

உண்டாட்டு-நிரைகொண்டார் தாங்கொண்ட நிரையைப் பகுத்துத் தாங்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதலும், நிரைமீட்டார் வென்று நிரைமீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும்;