பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் پیت -f

வாள் வலம் பெற்ற வயவேந்த னே வலாற் தான்வ விளையவர் தாஞ்செல்லி-னானைக் கனைகுர னல்லாத்தன் கன்றுள்ளப் பாலா னனைவது போலு நம் மூன்." (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-எடுக, நிரைமீட்சி)

இது படைச்செருக்கு; கண்டோர் கூறியது.

“வந்த நிாையி னிருப்பு மணியுட

னேந்தலை நின்றலை யாந்தருது-முந்து நீ மற் ற வை பெற்று வயவேந்தன் கோ லேசங்கக் கொற் றவை கொற் றங் கொடு.' (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு-எடுச, நிரைகோடல்) இது தெய்வத்திற்குப் பராஅயது; பிறவும் வருவனவெல்லாம் இதனான் அடக்குக.

இனிப் பாக்கத்து விரிச்சிக்குக் காரணங்களாவன, பாக்கத்துச் சென்றுழி இருப்பு:வகுத்தலும், பண்டத்தொடு வல்சி ஏற்றிச் சென்றோரை விடுத்தலும், விருச்சி வேண்டாவென விலக்கிய வீரக் குறிப்பும், விரிச்சிக்கு வேண்டும் நெல்லும் மலரும் முதலியன தருதலும், பிற நிமித்தப் பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும், பிறவுமாம்.

உதாரணம்:

'தாளும் புள்ளுங் கேள ஆக்க மொ

டெங்கே னேயின னாதலின் யாமத்துச் செங்கால் வெட்சியுந் தினையுந் து உய் மறிக்குரத் குருதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி போர்த்தல் வேண்டா வெயிற் புறத் தருதும்.யாம் பகைப் புல திசையே.' (தகடூர் யாத்திரை, புறத்திரட்டு-எடுடு, நிரைகோடல்) இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு; பிறவும் வந்துழிக் காண்க. அரசன் ஏவலாற் போந்தோரும் விரிச்சி கேட்டார், இன்ன ஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்கு.

விரிச்சியாவது, தெய்வத்தைப் பரவி நற்சொல் கேட் . ல், பகைவர் தம் நாட்டி ற் புகுந்து கள வினால் ஆநிரைகளைக் கவர்ந்த நிலையில் நிரைக்குரியோர் அரசனுக்குணர்த்தாதே விரைந்து சென்று தம்நாட்டு ஆநிரைகளை மீட்டுக் கொள்ளுதல் இயல்பாதலின் நிரை மீடி. ற்கு அரசனது ஆணை இன்றியமையாத தன்று என்பது கருத்து. - -