பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்தினை இயல்-நூற்பா க் ä 5

இனி வேய்க்குக் காரணங்களாவன: வேய் கூறினார்க்குச் சிறப்புச் செய்தல் போல்வன.

இனி ஏனைய ஒன்றுபலவாய்த் துறைப்பாற்படுவன வந்துழிக் காண்க.

இங்ங்ணம் புறத்திணைக்குச் சிறுவரவிற்றாதலின் அன்றே 'பாடல் சான்ற புலனெறி வழக்க மென்று (தொல்-பொ-அகத். இகட) அகத்திற்குக் கூறியது. நிரைமீட்குங்கால் அறிந்தார் அறிந்தவாற்றானே விரைந்து சென்று மீட்பாராதலின் அரசனை உணர்த்தாதே மீட்டல் பெறுதும்; இவற்றிற்குத் துறைப்பகுதி கொள்க.

கருத்து: இது, முதற் சூத்திர விறுதியில் வெட்சிதானே உட்குவரத்தோன்று மீரேழ் துறைத்தே எனத் தொகுத்தோதிய துறைகளின் வகையும் பெயரும் விளக்குவதாகும்.

பொருள்: படையியங் கரவம்-நிரைகவரப் படை நடக்கும் ஆர்ப்பு.

புடைகெடப் போகிய செலவு-பக்கத்து இடமில்லையாம்படி படை பரந்து செல்லுதல்.

பாக்கத்து விரிச்சிசெல்லும் பக்கத்தே - புள்வாய் நற் சொல்லின் குறிப்பறிதல் (விரிச்சி-புள்ளொலியால் நல்லதறிதல்)

புடைகெட ஒற்றின் ஆகிய வேய்-வேற்றுப்புலத்து இரு திறத்தும் ஒற்றறிய இடமில்லையாம்படி ஒற்றரால் அறிந்த உளவு. தம்மொற்றர் இனியறிய இடமில்லாதாயிற்று, அவர் முற்றும் ஒற்றி முடிந்ததனால் பிறர் ஒற்ற இடமில்லையாயிற்று. அவரறி யாவாறு தம் மொற்றர் மறைவில் ஒற்றிய திறப்பாட்டினால்.

வேய்ப்புற முற்றின் ஆகிய புறத்திறை-உளவறிந்த சூழலை வளைத்து அற்ற நோக்கி அடங்கியிருத்தல்.

முற்றியவூர்கொலை-வளைந்துகொண்டு நிரைமீட்கப் பொரு வாரைக்கோறல்;

(ஊர்-மீட்கப் பொரும் ஊரவர்க்கு ஆகுபெயர்.) ஆகோள்-ஆனிரை கொள்ளுதல்; பூசல் மாற்று-நிரைகொண்டு மீள்வோர் மீட்போரால் நேரும் பூசலை விலக்குதல். போர் இன்றி நிரை கொள்வதே நோக்காத லின், போர் என்னாது பூசல் எனப்பட்டது. பூசல்-போரின் முன்