பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


క్రీ: () தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

நிகழும் ஆர்ப்பு. போராய் வளருமுன் அதனைத் தடுத்து விலக்கல் வெட்சியார் வினையாதலின், பூசல் மாற்றெனப்பட்டது.

நோயின் றுய்த்தல்-பற்றிய நிரை வருந்தாவாறு கொண்டு செலுத்தல்;

நுவல் வழித்தோற்றம்-தம்மவர் புகழும்படி நிரைகொண்டார் மீளும் பொலிவு.

தந்துநிறை-கொண்ட நிரையைத் தம திடத்துக்கொணர்ந்து நிறுத்தல்;

பாதீடு-நிரைகொண்டோர் பரிசில் தம்முட் பங்கிடுதல். (பாதீடு-பங்கிடுதல்)

உண்டாட்டு-வெட்சியோர் வெற்றி மகிழ்ச்சியால் உண்டு களித்தல்;

கொடை-வென்று கொண்டோர், துடியன், கணி, பாணர் முதலிய இரவலர்க்கு ஈந்துவத்தல்; என வந்த ஈரேழ் வகையிற்றா கும்-என்று இவ்வாறு எண்ணப்பட்ட பதினான்கு வகைப்படும் (வெட்சித்துறைகள்)

குறிப்பு: செலவே, வேயே, மாற்றே என்பனவற்றுள் ஏகாரம் அசை நிலை; எண்ணேகாரமெனினும் அமையும். வெட்சித்திணை யென்பது மேற் சூத்திரத்தினின்றும் அவாய்நிலை எழுவாயாயிற்று. ஆய்வுரை

நூற்ப உ இது, வெட்சித்திணைக்குரிய துறைகளை விரித்துரைக்கின்றது. (இ-ன்) நிரைகோடல் கருதிப் படைகள் புறப்படும் ஆரவார மும், ஊர்ப்புறமாகிய பாக்கத்தே படைவீரர் நற்சொற் கேட்ட 'லும், பகைப்புலத்து ஒற்றர் முதலியோர் அறியாதபடி போதலும், பகைவர் அறியாதவாறு அவரது நாட்டின் நிலைமைகளை ஒற்ற ரால் ஆராய்ந்து அறிதலும் பின்னர்ப் பகைவரது ஊர்ப்புறத்தே சூழ்ந்து தங்குதலும், ஊரின் கண்ணே தம்மை வளைத்துச் சூழ்ந்த மறவர்களைக் கொல்லுதலும், அங்குள்ள ஆனிரைகளைக் கைப் பற்றிக் கொள்ளுதலும் அந்நிரையை மீட்டற்குத் தம்மைத் தொடர்ந்து வந்தவர்கள் செய்யும் போர்த்தொழிலை விலக்கி மீளுதலும், தாம் கவர்ந்துகொண்ட பசுநிரையை வருந்தாமற் செலுத்துதலும், இன்ன இடத்து வருவோம் எனத் தாம் சொல்லிச் சென்ற வழியிடையே தம்மை எதிர்பார்த்து நிற்கும் தம்மவர் உள