பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


: 5t தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற் றவை கைச்சிலையு நல்கும் யாங் கானேங்கொள்-மிச்சி ல் கூர் வாளின் வாய்த் தீண்டாத வகர் குருதி மெய் சாய்ப்பத் தாளின்வாய் வீழ்த்தான் தலை:' இஃது உயிர்ப்பலி; இது பொதுவகையான் இருவகை வெட் சிக்கும் வஞ்சிக்கும் பொது.

'ஆடிப்பண் பாடி யளவின் றிக் கொற் றவை பாடினி பாடற் படுத்துவந்தா-னாடிய தோளுழலை யாடுவோன் தோளினுந் துக்கமைத்த தகளுழலை யாடுவோன் றான். இது குருதிப்பலி: பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது (+)

நூற்பா ச

'மறங்கடைக் கூட்டிய குடிநிலை என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். ஐயனாரிதனார் வெட்சித் திணையில் துடி நிலை என்பதனையே துறையாகக் குறித்துள்ளமையின் ஐயனாரி தனார் கொண்ட பாடம் துடிநிலை எனத் தெரிகின்றமையின் நச்சினார்க்கினியரும் துடிநிலை’ எனவே பாடங் கொண்டார்.

"அத்திணை என்றது, நிரைகவர்தலும் நிரைமீட்டலும் ஆகிய அவ்விருவகை வெட்சித்திணையை எனக் கொண்ட நச்சினார்க் கினியர், 'புறன் என்பதற்கு அவ்விருவகை வெட்சித்திணைக்கும் புறனடையாம் எனப்பொருள் வரைந்தார். 'புறன் என்னும் இச் சொல்லினை அகத்திணைக்குப் புறனாகிய புறத்திணை என்ற கருத்திலேயே தொல்காப்பியனார் இவ்வியலில் ஆளுதலால் அத் திணைப்புறன் என்பதற்கு மேற்குறித்த குறிஞ்சிதினைப் புறனாகிய வெட்சித்திணையாம் என இளம்பூரணர் கூறிய பொருளே ஏற்புடையதாகும்.

கொற்றவை நிலைப்பகுதிகளாகிய உயிர்ப்பலி, குருதிப்பலி என்பன, நிரை கவர்தல், நிரைமீட்டல் ஆகிய இருவகை வெட் சிக்கும் மேற்சேரலாகிய வஞ்சிக்கும் பொதுவாய்வரும் துறைகள் என்பது நச்சினார்க்கினியர் உரைமேற்கோளால் இனிது புலனாம். பாரதியார்

கருத்து :-இது மேற்கூறிய வெட்சி விளக்கத்திலமையாத போர்த்துவக்கம் குறியாகும் வெட்சிவகை வேறு சில கூறுகின்றது .