பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினை இயல்-நூற்பா க ❖፻፵፭፻

வாளாசுட்டி, ஒரு பரிசாயெண்ணுதல் அமைவுடைத்தன்று. புறத் துறைகளாக வேறு சூத்திரங்களில் விளக்கப்படும் இரண்டனொடு பின் சூத்திரத்தில் கொடிநிலை வாளா கூட்டிக் கூறப்பெறுதலால், அவையொப்பக் கொடிநிலையும் புறத்துறையாம் பரிசு பிறிதிடத் தில் சுட்டப்பெறுதல் முறையாகும். அதனாலும், கொடியெடுப்பு போர்த் துவக்கத்தில் நிகழ்வதொன்றாதலானும், கொடி நிலையைக் கொற்றவை நிலையோடு வெட்சி வகையாய் இதில் தொல்காப்பியர் கூறினார் எனக் கொள்ளுதலே சிறக்கும். அக் கொடி நிலைப்பாடம் நாளடைவில் ஏடெழுதுவோரால் குடிநிலை யாக மாறி இளம்பூரணர் கண்டிருத்தல்வேண்டும். அப்பாடம் சிறவாமையால் அதனைப் பொருள் பொருந்தப் போர்க்குரிய துடி நிலையாக்கி நச்சினார்க்கினியர் பாடங்கொண்டதாகக் கருதற்கு இடனுளது. அன்றியும் துடி சூறைசுட்டும் பாலைநிலப் பறையே யாதலானும் எல்லா நிலத்துக்கும் பொதுவான போர்ப்பெரு முரசுக்குப் பெயரன்றாதலானும், இங்குத் துடிநிலைப் பாடத்தி னும் கொடிநிலைப் பாடமே சிறப்புடைத்தாதல் மலையிலக்காம் ஆகவே, இளம்பூரணரின் குடிநிலை நச்சினார்க்கினியரின் துடி நிலை' எனுமிரு பாடங்களையும் கொள்ளாது. இதில் கொடி நிலையே பாடமாகக் கொள்ளின், பின் கடவுள் வாழ்த்தொடு கண்ணியவரும், எனத் தொகுத்து மூன்றனுள் மற்றவற்றோடு கொடிநிலையைக் கூட்டிக் கூறிய பெற்றி இனிது விளங்கும்.

போர்க்குமுன் படையெடுக்கும் மரபுண்மையை

புள்ளும் வழிப்பட ப் புல்லார் நி ைகருதிப் போகுங்காலைக்

கொள்ளுங் கொடியெடுத்துக் கொற் ற வையும் கொடு ம முன் செல்லும் போலும்

என்னும் சிலப்பதிகார வேட்டுவவரி அடிகளாலும் அறிக.

ஆய்வுரை

நூற்பா ச7 (இ.ஸ்) இதுவும் அது. மறத்தொழிலை முடிக்கவல்ல வீரக் குடியிற் பிறந்தாரது நிலைமையைக் கூறுதலும், அவர்களது தறு கண்மையினை வளர்க்கும் சிறப்புடைய தெய்வமாகிய கொற்றவை

1. துடி நிலையும் கொற்றவை நிலையும் நிரை கவர்தல் நிரைமீட்டல் ஆகிய இருவகை வெட்சிக்கும் புறனடை எனவே நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்: வெட்சியின் புறம் என அவர் குறிப்பிட வில்லை.