பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


♔ ു. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

கண் நிகழ்வதாகலின் வெட்சிப் பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனா யிற்று.

(இ-ஸ். வெறியாட்டயர்ந்த காந்தளும் என்பது முதலாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் என்பது ஈறாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று துறையும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈறாகக் கல்லொடு புணர்த்துக் கூறும் துறையொடுங் கூடச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைத்து."

வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்-வெறி ஆடுதலை அறியும் சிறப்பினையுடைய வெவ்விய வாயினையுடைய வேலன் வெறியாடிய காந்தளும்.

காந்த ளென்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவா ருளராகலின், வெறியாட்டு அயர்ந்த காந்த ளென்றார்." அன்றி யும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றலாகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறி காந்தள் எனவும் பெயராம். இதனானே காமவேட்கையின் ஆற்றாயளாகிற பெண்பாற் பக்க மாகிய வெறியும் அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும் இவ்வெறி இந்நிலத்திற்குச் சிறந்தமை அறிக. இது வெட்சிப் பின்னர் வைத்தார், பெரும்பான்மையும் குறிஞ்சி பற்றி நிகழு மாகவின்.

3. காந்தள் முதலாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னோடு புணர்த்தல் ஈறாக எண்ணுமிடத்துப் பன்னிரண்டு துறைகளே வருகின்றன. இவற்றுடன் வருதார் தாங்கல், வாள் வாய்த்துக்கவிழ்தல் என்னும் இருவகைப்பட்ட பிள்ளை நிலைகளையும் பிள்ளையாட்டினையும் கூட்டப் பதினைத்தாயின. இவற்றுடன் "இருமூன்று வகையிற்கல்’ என்னும் ஆறினையும் சேர்த்து எண்ணத் துறைகள் ழு மூன்றாதல் (இருபத்தொன்ற தல்) காண்க. இச்சூத்திரத்தில் 14-ஆம் அடியாக இடம் பெற்றுள்ள அனைக்குரிமர பினது கரந்தையன்றியும் கான்ற அடி ‘நாடவற்கருளிய பிள்ளையாட்டும்’ என்ற அடியின் பின் 18-ஆம் அடியாக இருத்தல் வேண்டும் என்பது இளம் பூரண ருரையாலும் நச்சினார்க்கினியர் உரை யாலும் நன்கு புலனாகின்றது. எனவே வெறியாட்டயர்ந்த காந்தளும் என்பது முதலாகத் தலைத்தானெடுமொழி தன்னொடுபுணர்த்தலும் என்ப தீறாகச் சால்லப்பட்ட பன்னிரண்டு துறையும் வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும் பிள்ளையாட்டும் ஆகிய அணைக்குரி மறு பிற் கரந்தையன்றியும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈறாகக் கல்லொடு புணர்த்துக் கூறுந்துறையொடுங்கூடச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைத் து’’ Gf öðY இவ்வுரைத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும்.

4. காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவாருமுளர். அவர் தம் கொள்கையை உடன்படாது வெறியாட்டயர்தலே காந்தளாம் என வற் புறுத்தும் முறையில் அமைந்தது வெறியாட்டயர்ந்த காந்தள்’ என வரும் இத் தொடர் என்பது கருத்து.

5. காந்தள் என்பதனைத் தலைவன் மடலேறுதற்குப் பெயராக வழங்குவரர் கருத்தை ஏற்று அங்கனம் மடலேறும் அளவுக்கும் ஆற்றாளாகிய தலைவி மாட்டுத் தோன்றும் வெறியும் காந்தள் எனப் பெயர்பெறும் எனவும், இதனால் காமவேட்கையின்ால் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய அகத்தினை பற்றிய வெறியும் அக்குறிஞ்சி நிலத்துள்ளார் அரசனது வெற்றியை விரும்பி நிகழ்த்தும் புறத்