பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல் நூற்பா-இ டுங்.

இது காமவேட்கை தோற்றாமல் தலைமகள் தானே முருகு மேல் நிறீஇ ஆடியது. வென்றி வேண்டியாடுதற்குச் செய்யுள் சிலப்பதிகாரத்து வேட்டுவவரியுட் கண்டு கொள்க. இனி வேலன் தானே ஆடியதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க.

உறு பகை வேந்து இடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ் போந்தை வேம்பு ஆர் என வரும் மா பெருந் தானையர் மலைந்த பூவும்-மிக்கபகை வேந்தன் வேறுபாடு தெரிதல் வேண்டி உயர்ந்த புகழையுடைய போந்தையெனவும் வேம்பெனவும் ஆரெனவும் தமிழ்நாட்டு நிலவேந்தர் சூடிய பூவும்.

நிரைகோள் கேட்டவழி நெடுநிலவேந்தரும் கதுமென எழு வராதலின், நிரை மீட்டலின்கண் பூப் புகழப்பட்டது.

வாடா வள்ளி-வாடுதல் இல்லாத வள்ளி. "வள்ளி என்பது ஒருகூத்து; அஃது அந்நிலத்தின் நிகழ்தலின் 'வாடா வள்ளி’ என்றார். உதாரணம் வந்த வழிக் கண்டு கொள்க.

வயவர் ஏத்திய ஓடா கழல் நிலை-வீரராற் புகழப்பட்ட கெடாத கழல் நிலை.

ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்-ஒடாத வெகுண்ட வேந்தரைச் சார்த்திய உன்ன நிலையும்.

  • உன்னம்’ என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடுவருங் கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும்.

பிறவும் நிமித்தமாகி வருவன வெல்லாவற்றிற்கும் இதுவே துறையாகக் கொள்க.

மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின் தாவா விழு புகழ் பூவை நிலையும்-மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ் சிறப்பினையுடைய கெடாத விழுப்புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதலும்.

பூவை மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின், அக்காட்டிடைச் செல்வோர் அப் பூவையைக் கண்டு கூறுதல். உன்னம் கண்டு கூறினார் போல இதுவும் ஒரு வழக்கு.

இஃது உரையன்றென்பார், மாயோன் முதலாகிய தேவர் களோடு உவமித்தலே பூவை நிலை யென்ப. திணையற்றிய வெறியும் உடன் கொள்ளப்படும் என வும், புறத்தினை பற்றிய இவ்

வெறியாடல் குறிஞ்சியாகிய இந்நிலத்திற்குச் சிறந்தது எனவும் கூறுவர் இளம் {h# ক্ষয় .