பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டுச தொல்காப்பியம்- பொருளதிகாரம்-உரை வளம்

வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க. என்னை?

ஆர் அமர் ஓட்டலும் அரிய அமரைப் போக்குதலும், ஆபெயர்த்துத் தருதல்-நிரை மீட்டல். சீர் சால்வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்-சீர்மை பொருந்திய வேந்தனது மிகுதியை எடுத்துக் கூறலும்.

இது மற்றுள்ள திணைக்கும் பொது. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்.தன் மாட்டுள்ள போர்வலி முயற்சியினாலே கொடுஞ்சொற்களைத் தன்னொடு புணர்த்திக் கூறுதலும்.

இது மற்றுள்ள திணைக்கும் பொது. வருதார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று இரு வகைப்பட்ட பிள்ளை நிலையும். மேல் வருகின்ற கொடிப்படை யைத் தாங்கலும் வாள் வாய்த்தலாற் படுதலும் என இரண்டு வகைப்பட்ட பிள்ளை நிலையும்.

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை துரங்க நாடு அவர்க்கு அருளிய பிள்ளையாட்டும் - வாளான் மாறுபட்டு எழுந் தவனை மகிழ்ந்து பறை ஒலிப்ப அவற்குத் துறக்கமாகிய நாட்டை அளித்த பிள்ளையாட்டும்.

காட்சி-(போர்களத்துப் பட்ட வீரரைக் கல்நிறுத்தற் பொருட்டுக்கற்) காண்டல்.

கல்கோள்.(அவ்வாறு காணப்பட்ட) கல்லைக் கைக்கோடல். நீர்ப்படை-அக்கல்லை நீர்ப்படுத்துதல். நடுதல்-(அக்கல்லை நடுதல்.

சீர் தகு மரபின் பெரும்படை - மிகவுந் தக்க மரபினையுட்ைய பெரும்படையினும்,

அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ் செய்தல், அஃது இற் கொண்டு புகுதலென உரைத்த துறை, கோட்டம் - கோயில். படை - படைத்தல்.)

வாழ்த்து-(அக்கல்லைப்) பழிச்சுதல். இவை யெல்லாம் கரந்தைக்கு உரித்தாக ஒதப்பட்டனவேனும் "ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக் கென மொழிப (பொருளியல்-உஅ என்றதனான், மறத்துறை ‘ஏழிற்கும் கொள்ளப்படும். ஈண்டு ஒதப்பட்ட இருபத்தொரு துறையினும் நிரைமீட்டற் பொருண்மைத்தாகிக் கரந்தையென