பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல் நூற்பா-க இடு

ஒதப்பட்டன ஏழாயின." கரந்தையாயினவாறு என்னையெனின்," வெறியாட்டும் வள்ளிக்கூத்தும் மலைசார்ந்த இடத்து வழங்கு தலின், வந்த நிலத்திற்கு உரிய பொருளாகி வந்தன. பூவை நிலையும் அந்நிலத்தைச் சார்ந்து வருவதொரு தெய்வமாதலின், அந்நிலத்தின் கருப்பொருளாகி வந்தது. கற்கோள் நிலையாறும் உன்ன நிலையும் முடியுடை வேந்தர் குடும் பூவும் கழல்நிலையும் ஏனையவற்றிற்கும் பொதுவாகலான், எடுத்துக்கொண்ட கண்ணே கூறுதல் இலக்கணமாதலின் ஈண்டு ஒதப்பட்டதென உணர்க; பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்ணொடுவருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக்கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக்கூறலும் குன்றக்கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாதலான், உய்த்துணர்ந்து கண்டு கொள்க. இத்துணையும் கூறப்பட்டது வெட்சித்திணை.'"

தச்:

இது முன் இருபெருவேந்தர்க்கும் போர்செயத் தொடங்கு தற்குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக்

6. இச்சூத்திரத்தில், நிரை மீட்டற் பொருண்மைத் தாகிக் கரந்தையென ஒதப்பட்டவை: ஆரமரே சட்டல், ஆபெயர்த்துத் தருதல், சீர்சால்வேந்தன் சிறப் பெடுத்துரைத்தல், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல், வருதார் தாங்கல், வாள் வாய்த்துக் கவிழ்தல், வாண்மலைத்தெழுந்தோனைமகிழ்ந்து பறை துரங்க காடு அவற்கருளிய பிள்ளையாட்டு என்னும் ஏழுமாம். அனைக்குரி மரபிற்கரந்தையான்றியும் என்பது மேற்குறித்த ஏழு துறைகளையும் தொகுத்த தொடராகும். இந் நுட்பம், 'ஈண்டு ஒதப்பட்ட இருபத்தொரு துறையினும் நிரை மீட்டற்பொருண்மைத்தாகிக் கரந்தையென ஒதப்பட்டன ஏழாயின் என வரும் இளம்பூரணர் உரைத்தொடரால் இனிது புலனாம்.

7. கரந்தையாயினவாறென்னையெனின் எனவரும் இளம்பூரணர் உரைத் தொடரின் முன்னே ஏனைய என்னும் சொல்லை பியைத்து ஏனைய கரந்தை யாயின வாறென்னையெனின் என வினாவாக்கி வெறியாட்டும் வள்ளிக்கூத்தும் ...........................ஒதப்பட்டதெனவுணர்க' என வரும் பகுதியை அதற்குரிய விடையாகக் கொள்க. ஏனையவாவன: வெறியாட்டயர்ந்த காந்தள், வாடா வள்ளி, பூவை நிலை, உன்ன நிலை , போந் ைக. வேம்பு, ஆர், கழல்நிலை, காட்சி, கல்கோள், நீர்ப்படை, நடுதல், சீர்த்தகுமரபிற்பெரும்படை, வாழ்த்தல் என்னும் பதினான் கும் ஆகும். ஆக இளம்பூரணர் வகைப்படுத்திய கரந்தைக்குரிய துறைகள் இருபத்தொன்றாதல் காண்க.

8. கூறினார லெனின்’ என்றிருத்தல் வேண்டும்.

9. பன்னிருபடலத்தின் வழிநூ லாகிய புறப்பொருள் வெண்பாமாலை வெட்சி மறவர் செய்த வீரச் செயல்களை விளக்கும் புண்னொடு வருதல், போர்க்களத் தொழிதல் என்னுந்துறைகளைக் க! ந்தைத் திணைக்குரிய துறைகளாகக் கொண் டு கூறியுள்ளமை இளம் பூரணர் கூறும் பிறுப்புக்கு உரியதர்தல் இங்குக் கருதற்குரியதாகும்.

10. காந்தையென்பது தனித்திணையன்று; வெட்சித்திணையின் ஒரு பகுதியே யென்பதனை வற்புறுத்துவது இவ்வுர்ைத்தொடர். -