பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

হস্য 0 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

பும் பொருவுதல் கூறல் வேண்டும்; ஆசிரியர் அவை கூறாமையின், அது புலனெறிவழக்க மன்மை யுணர்க. இதனுட் கரந்தைப் பகுதி ஏழும் வேறு கூறினார்; காட்டகத்து மறவர்க்குங் குறுநில மன்னர்க்கும் அரசன் படையாளர் தாமே செய்தற்கும் உரிமையின. கற்பகுதி வேத்தியற் புறத்திணைக்கும் பொதுவாகலின் வேறு கூறி னார். ஏனைய அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகலின் வேறு கூறினார்."

இனி துறையென்றதனால் ஒன்று பல வாம். அவை, கற் காணச்சேறலும் இடைப்புலத்துச் சொல்லுவனவுங், கண்டுழி யிரங்குவனவுங், கையறுநிலையும், பாணர் கூத்தர் முதலியோர்க் குரைப்பனவும், அவர் தமக்குரைப்பனவும் போல்வன கற்காண் டலின் பகுதியாய் அடங்கும்; கால்கொள்ளுங் காலத்து, மாலை யும் மலரும் மதுவுஞ் சாந்தும் முதலியன கொடுத்தலும், அனை யோற்கு இனைய கல் தகுமென்றலுந், தமர்பரிந்திரங்கலும் முதலியன கால்கோளின் பகுதியாய் அடங்கும்; நீர்ப்படுக்குங்கால் ஈர்த்துக்கொண்டொழுக்கலும் ஏற்றிய சகடத்தினின்று இழிந்த வழி ஆர்த்தலும், அவர் தாயங்கூறலும் முதலியன நீர்ப்படையாய் அடங்கும்; நடுதற்கண் மடையும் மலரும் மதுவும் முதலியன கொடுத்துப் பீலித்தொடையலும் மாலையும் நாற்றிப் பல்லியம் இயம்ப விழவுச் செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடங்கும்; பெயரும் பீடும் எழுதுங்காலும் இப் பகுதிகள் கொள்க; நாட்டப் படுங் கல்லிற்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைச் சிறப்புக் சளும் படைத்தல் பெரும்படைப்பகுதியாய் அடங்கும்; வாழ்த்தற் கண்ணும் இதுதான் நெடிது வாழ்கவெனவும் இதன் கண்ணே அவனின்று நிலாவுக வெனவும் பிறவுங் கூறுவனவுமெல்லாம் வாழ்த்துதலாய் அடங்கும்; ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப் பகுதி கூறிக்கொள்க.

இனிப் 'பரலுடைமருங்கிற் பதுக்கை’’ என்னும் (உசுச) புறப் பாட்டினுள் அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித் திணி நட்ட னரே கல்லும்" எனக் கன்னாட்டுதல் பெரும்படைக்குப் பின்னாகக்

8. வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் நூற்பாவிற் கூறப்பட்ட இருபத் தொரு துறைகளையும் அகத்திற்கும் புறத்திற்கும் உரிய பொதுப்பகுதி எட்டென வும் கசந்தைப்பகுதி ஏழெ னவும் கற்பகுதி ஆறெனவும் மூன்று பகுதிகளாகப் பகுத துரைப்பர் நச்சினார்க்கினியர். வெட்சித் திணை என்பது போரின் தொடக்க மாதலின், மறனுடைய மரபின் புறத்திணைகட்குப் பொதுவாகிய துறைகள் வெட்சித்தினைத் துறைகளையடுத்து இந் நூற்பாவிற் க றப்பட்.. ன என்பது நச்சி னா க்கினியர் கருத்தாகும்.

(பாடம்) 3 காண்டிற்கட் சேறலும்: