பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-டு ©ᎢᎦᏐ

கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டு நாட்டோர் முறைமையென்பது சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க. 'பெயரும் பீடு மெழுதி யதர்தொறும்-பீவி சூட்டிய பிறங்குநிலை நடுகல்’ என அகத் திற்கும் (அகம் கா. க) வருதலிற் பொதுவியலாயிற்று; இவை ஒரு செய்யுட்கண் ஒன்றும் பலவும் வருதலும், அகத்தின் கண் வருதலுஞ் சுட்டி யொருவர் பெயர் கோடலுங் கொள்ளாமையும் உடையவென்று உணர்க.

இப் பொதுவியலின் பின் வஞ்சி வைத்தார், வஞ்சிக்கண்ணும்

பொதுவியல் வருவனவுள என்றற்கு, அது "வேந்துவினை முடித் தனன்' என்னும் (கசே) அகப்பாட்டினுட் சுட்டியொருவர், பெயர்

கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க. (டு) பாரதியார்

கருத்து :- நிரைகவரும் வெட்சிக்குரிய படையியங்கரவ

முதலிய துறை பதினான்கு முன்கூறி, அஃதல்லாத கொடிநிலை', "கொற்றவை நிலை போன்ற போர்த் துவக்க வெட்சி வகையின் துறை இருபத்தொன்று இதில் விளக்கப்படுகின்றன.

(வெட்சி வகையுள் சிறந்த ஆகோளையும் அதன் துறை பதினான்கையும் முதல் மூன்று சூத்திரங்களில் விளக்கி, பிறகு போர்த் துவக்கத் தினையாகிய வெட்சியில் சிறந்து வரும் ஆகோளே யன்றிப் பொதுவாக வரும் கொற்றவை நிலை போன்ற வேறு வெட்சிவகை யுண்மை இதன்முன் சூத்திரத்தில் கூறப் பட்டது. அப் பிற வெட்சி வகைகளுக்குரிய துறைகளை இது சுட்டுகின்றது.)

பொருள் : (1) வெறி யறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்த்த காந்தளும்-குறித்த போரில் கொற்றம் கருதிச் செறுமிகு சேயான முருகனை முதலில் பரவி, அவனுக் குரிய களியாட்டில் குறியுணர்ந்து கூறும் சிறப்பினையுடைய விரும்பத்தகும் வாய்ப்புணர்த்தும் வேலன் ஆடும் காந்தளும்.

(இவ்வெட்சிக்கு நேரான குறிஞ்சித்திணையில், தன் களவை மறைத்துத் தனிமை யாற்றாது தளரும் தலைவியின் மெலிவு கண்ட தாயர் உண்மை யுணரவேண்டிக் குறி சொல்ல விரும்பி யழைக்கும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சார்ந்தது. அதனின் வேறாய அக்குறிஞ்சிக்குப் புறனான வெட்சியில் வரும் துறை யான வேலன் வெறியாட்டு என்பதை விளக்கவே இது வெறியாட்டு