பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-டு を「五

முருகனைப் பரசி வேலனாடுவது காந்தள்: அக்கடவுளைப் பாடிப் பெண்டிர் ஆடும் கூத்து வள்ளி. இது, மகளிர் மக்கட் டலை வனைப் புகழ்ந்து பாடும் உலக்கைப் பாட்டாகிய வள்ளை போலாது, காந்தளைப் போலவே கடவுள் வாழ்த்தொடு கண்ணியவரும். இவ்வியலில் பின்வரும் கொடிநிலை காந்தள் வள்ளி என்ற கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” எனும் சூத்திரத்தாலும் இவ்வியல்பு விளங்கும்.

பன்isர நீளி டைப் போகி நன்னகர்

விண்தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த

வாடா ள்ளியின் வளம் பல தரூஉம்

நாடு பல கழித்த பின்றை எனவரும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில் விண்ணுற வோங்கி விளங்கும் மதில் சூழ்ந்த மாடங்கள் நிறைந்த ஊர் களிலும் புறநாடுகளிலும் கடவுளைப் பரசிப் பெண்டிர் ஆடும் வள்ளிக் கூத்தின் வளப்பம் குறிக்கப்படுவதறிக.

(6) வயவர் ஏத்திய ஓடாக் சுழல்நிலை-வென்றி மறவர் புகழும் புறங்கொடா வீறு குறிக்கப் பொருநர் காலில் அணியும் கழல் நிலையும்;

(கழல் என்பது போர் வென்றிப் பெருமிதக் குறியாக மறம் பேணும் திறலுடையார் காலில் பூணும் ஒரு அணிவகை. இதில் எண்ணும்மை தொக்கது)

ஒட த் தானை ஒண்தொழிற் கழற்கால்

செவ்வ ை நாடன்... எனும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில், மறக்குறியாகத் தானை காலில் கழலணியும் பரிசு கூறப்படுதல் காண்க.

(7) ஓடா உடல் வேந்து உளப்பட அடுக்கிய உன்ன நிலையும்-பின் வாங்காது மலையும் வேந்தன் வெற்றியை உளத் தெண்ணி, சார்த்து வகையால் உன்ன மரத்தில் நிமித்தங் கொள்ளும் உன்ன் நிலையும்.

(உடல்வேந்து என்பது பொருபடை என்பது போன்றதோர் வினைத்தொகை, உடலும் வேந்து என விரியும். உடலுதல்சினந்து பொருதல் பகைத்ததுமாம்.)

உன்னம்-சிற்றிலையும் பொற்பூவுமுள்ளதோர் மரவகை. பண்டைத் தமிழ் மறவர் போர்க்கெழுமுன் உன்ன மரக் கோட்டில் மாலைகளை அடுக்கிய நிமித்தங் கொள்ளுவது வழக்காறு. (இனி,