பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Tேது: தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

குறிபார்ப்பவர் தம் மன்னற்கு ஆக்கம் எனின் அம்மரக்காடு தழை வதும், கேடுளதேல் அழிவதும் ஆகிய ஒரு கடவுட் டன்மையுண் டென்றும், அதனால் பொருநர் போருக்குமுன் அம்மரத்தைப் பரசிக் குறி கேட்பரென்றும், அவ்வாறு கேட்டலே உன்ன நிலை யென்றும் உரைப்பாருமுளர்.)

(8) மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்- மாயோன் விரும்பும் நிலைத்த பெரிய சிறப்பினையுடைய கெடாத உயர்ந்த புகழினைக் குறிக்கும் காயா மலரால் நிமித்தங்கொள்ளும் பூவை நிலையென்னும் துறையும்.

உன்ன மரக்கோட்டால் நிமித்தங் கொள்ளுவது போலத் தானை மறவர் காயாம் பூவால் நிமித்தங்கொள்ளும் ஒரு பழிவழிக் குண்டு.

பூவை விசியும் புதுமலகிற் பூங்கழ லோய் யாவை விழுமிய யாமுனரேம்-மேவார் மறத் தொடு மல்லர் மறக்கடத்த காளை நிறத் தொடு நேர்வருத லான். என்னும் வெண்பாமாலைப் பாட்டாலும் அது விளக்கமாகும்.”

(பிற்காலத்தில், பூவை நிலை சிறப்பாக மாயோனையும் பொது வகையில் பிற கடவுளரையும் ஒரு தலைமகனுக்கு ஒப்பிடும் துறையாகக் கருதப்பட்டு வருகிறது, இப்பொருளுக்கு,

து று அலன் உயரிய னரிமருள் அவிர்சடை மாற் றருங் கணிச்சி மணி மிடற் றே னும் எனும் நக்கீரர் புறப்பாட்டை மேற்கோளாகக் கொள்ளுவர். இதில் பாண்டியன் நன்மாறனைக் கண்ணுதற்கடவுள், பலராமன், திருமால், செவ்வேள், என்னும் நான்கு கடவுளர்க்கும் ஒப்புக் காட்டிப் புகழ்வதால், இப்பாட்டு பூவை நிலைத்துறைக்குச் சிறந்த பாட்டு எனக் கொள்ளப்படுகிறது. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வரும் உள்வரி 3-உம் முறையே பாண்டியன், சோழன் சேரன் ஆகிய மூவேந்தரையும் தனித்தனியே திருமாலுக்கு ஒப்புக் கூறுதலால், அவையும் பூவை நிலையாம் என்பர் )

(9) ஆரமர் ஒட்டலும்-நிரை கவர்ந்த படை மறவரைக் கரந்தைப் பொருநர் வென்று புறம்கொடுத்தொடச் செய்தலும்,

2. இவ்வெண்பாமா லைப்பாடல் பூவை நிலைக்கு இலக்கியம். இதுகொண்டு

காயாம் பூவால் ஜிமித் தங் கொள்ளும் வழக்கம் உண்டு எனத் துணிதற்கு இடமில்லை , -