பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-டு డొ స్త్ర

.........................வேண்டார்

எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில்

கள்ளுடைக் கலத்தர் உள்ளுர்க் கூறிய

நெடுமொழி...... எனவரும் அடிகளில், பொருநர் போர்க்குமுன் ஊர்க்குள் நெடு மொழி கூறும் வழக்குண்மை சுட்டல் அறிக.)

(13) அனைக்குரி மரபினது கரந்தை, அன்றியும்-அத் தன்மைக்குரிய முறையால் வரும் நிரைமீட்சித் துறைவகை யெல் லாமும் கரந்தை வகையாகும். அல்லாமலும் (அனைத்துச் சொல் அத்தன்மைத்து எனப் பொருள்படுதல், அனைத்தாகப் புக்கி போய்’ எனும் 78-ஆம் கலிப்பாட்டில் வருதலாலறிக. அனைத் துக்கு என நிற்கற்பாலது அனைக்கு எனக்குறுகியது, செய்யுளிசை நோக்கி; மனத்துக்கு என்பது மனக்கு எனவும், போருள தனைத்தும் என்பது போருளதனையும் எனவும், கம்பர் பாட்டுக்களில் இசை நோக்கிக் குறுகி வருதலும் காண்க.

இனி, ஆரமரோட்டல் முதல் கூறிய நான்கும் நிரை மீட்சிக்கே வுரியவாதலின், அவற்றைக் கரந்தை' என ஒருங்கு தொகுத்து, இதிற் கூறும் பிற வெட்சித் துறைகளினின்றும் வேறு பிரித்ததன் குறிப்பு அன்றியும் எனுஞ் சொல்லிடைப் பெய்து விளக்கப் பட்டது. பின்னைய பிள்ளை நிலை இரண்டும் பிள்ளையாட்டு ஒன்றும் ஆக மூன்றும் கரந்தையேயன்றி பிறவற்றிற்கும் ஏற்கு மாதலின் அவை கரந்தைத் தொகுதியிற் கூட்டப்படாமல் வேறு பிரித்துக் கூறப்பட்டன. இதில் கரந்தை என்பது தனித் துறை யாகாமல் நிரை மீட்சித் துறை பலவற்றிற்குப் பொதுப் பெயராய்க் குறிக்கப்பட்டது. கரந்தை வெட்சித் திணை வகையாய்ப் பல துறைகளைத் தன்னுள் அடக்கி நிற்பதல்லாமல் தனித்தொரு துறையாகாமையால், அதற்குத் தனித்து மேற்கோட்செய்யுள் கூறுமாறில்லை. வெட்சியொடு கரந்தையை மயங்கவைக்கும் நச்சினார்க்கினியரும், கரந்தை வெட்சித்திணையாகாது எனக் கூறுகின்றார். கரந்தையாவது தன்னுறு தொழிலாக நிரைமீட் டோர் பூச்சூடுதலாற் பெற்ற பேராதலின், வெட்சித்திணைபோல ஒழுக்கம் அன்று என்பது இச்சூத்திரத்தின் கீழ் அவர் தரும் குறிப் பாகும். மேலும், கரந்தையை ஒரு தனித்துறையாய்க் கொள்ளின், இங்கு மொத்தம் எழுமூன்று துறைத்தே எனக் கூறியதற்கு மாறாகத் துறையெண் 32 ஆகும். இது கூடாமையால், இதில் கரந்தையைத் தனித்துறையாய்க் கொள்ளாமல் நிரைமீட்சித்