பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ଶ୍ଯ -#! தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

துறைகளுக்குப் பொதுப் பெயராகவே கொள்ள வேண்டுமென்பது தேற்றம். எனவே, இதனை ஒரு தனித் துறையாக்குதல் பொருந் தாமை வெளிப்படை)

(14) வருதார் தாங்கல்-எதிர்த்து வரும் படையின் முன்னணியைத் தனித்து நின்று தடுத்தல்.

(தார் என்பது படையணியைக் குறிக்கும். இதுவும் கரந்தை வகையேயாம்.

'ஒன்னார் முன்னிலை முறுக்கிப் பின்னின்று

நி ையொடு வரூஉம் என்னை."

எனும் 252-ஆம் புறப்பாட்டில் இத்துறைவிளக்கம் காண்க. இது எதிரூன்றிப் பொரும் தும்பைத்திணைத் துறையாகாமல் வெட்சித் துறைக்குரியது என்பது பின்னின்று நிரையொடு வரூஉம்' எனும் குறிப்பால் தேறப்படும்)

(15) வாள் வாய்த்துக் கவிழ்தல் -பகைவர்களால் பட்டு வீழ்தல்.

என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும்-(வருதார் தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தல்) என இருதிறப்படச் சுட்டப் பட்ட பிள்ளை நிலைத் துறைகளும்.

(மேலே சிறப்பாகக் கரந்தை வகை நான்கு கூறி அவற்றைத் தொகுத்துப் பொதுவாகக் கரந்தையெனக் கூறியதுபோல, இங்குத் தார் தாங்கல், கவிழ்தல் எனும் இருவகைத் துறைகளும் 'பிள்ளைநிலை என்பதன் வகைகளாம் என்பதை விளக்கி இவ்விரண்டின் பின் இருவகைப் பட்ட பிள்ளைநிலையும் என்று அவற்றின் தொகையும் பொதுப் பெயரும் கூறப்பட்டன. அஃதன்றிப் பிள்ளைநிலை எனத் தனித்தொரு துறையின்மை யால், துறை எழுமூன்றில் இது தனித்தெண் பெறாது)

(16) வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டும்-(ஆகோளல்லாத வெட்சிப் போரில் வாளால் பொருது வென்று வந்தவனை உவந்து முரசொலிக்க நாட்டை அவனுக்குப் பரிசிலாய் அளிக்கும் பிள்ளை யாட்டென்னும் துறையும்.

(தனக்கு வெற்றி தந்த வீரனை வேந்தன் நாடுதவிப் பாராட் டுதல் நன்றி மறவா மறக்கட னாகும். இதற்கு, வாட்போரில் இறந்த மறவனுக்குத் துறக்கமாகிய நாட்டை அளித்த பிள்ளை