பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா உக ఊ3{F_

என்பது பார்ப்பணி கூற்று."

"பெரியார்க், கடியரோ ஆற்றாதவர்.' (கலி. அ.அ)

என்பது அரசி கூற்று.” (உக)

நச்சினார்க்கினியம் :

இது தலைவர்க்குரிய தல்ைவியர் பலருந் தலைவன ப தைமை காரணமாக ஊடற்குரியரென்பது உம் அவ்ரிடத்து வாயில் சேறற்குரியரென்பது உங் கூறி வழுவமைக்கின்றது.

(இ-ள்) பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்து - தலை வன் பரத்தைமையால் தலைவிக்குத் தோன்றிய ஊடல் தீர்த்தற் குரிய வாயிலை அவர்பாற் செலுத்தல் நான்கு வருணத்தார்க்கும் உரித்து: அஃது நிலத்திரிபு என்று என்மனார் புலவர் - அவ் வொழுக்கம் பெரும்பான்மை மருதநிலத்தினின்றுந் திரிந்துவருதல் இன்றென்று கூறுவர் புலவர் (எ . மு.)

'பரத்தைவாயி'லென்றது குதிரைத் தேர்போல நின்றது,"

1. பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த வேந்தர்களால் பார்ப்பனர் க்கும் பிரமதேய +... gr <5, வழங்கப்பட்ட ஊரின் ஆட்சிமுறை பார்ப்பனரால் தேர்ந்து கொள்ளப்பெற்ற ມr ບໍu. 49 உரியதாய் வழங்கிய தம் காலத்து கடை முறையினை பெண்ணி * ஊரா என் மை” என்றது பார் ப்யனர் க்கே புரியதா மெனக் கருதிய

இளம்பூரணர்,

'இதுவும் ஓர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து' என்பதனைப் பார்ப்பணி கற்று என்றார்.

2. பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர்' என அடிமை முறையினை யெதிர்த்துக் கூறும் இவ்வுறுதிப்பாடு ஆட்சியுரிமையினை மேற்கொண்ட அரச குலமகளிர்க்கன்றி ஏனையோர்க்குத் தோன்றுதலரித்ாகலின் இது அரசி கூற்று: என்றார். எனினும் இங்கனம் தலைவனொடு புலந்துரைக்குங்கால் இன்ன இன் ன குலத்துத் தோன்றிய மகளிர் இன்னின்னவாறு புலங் துரைப்பர் எனக் கொள்ளுதல், ஒப்பாரும் மிக்காரும் இன்றி அன்பினைக்தினையொழுகலாற்றில் ஒழுகும் காதல சிருவரது காதற்கேண்மைக்குத் தக்கதன்றாதலின் மேற்குறித்த இளம்பூரணர் விளக் கம் அவர் கால நிலைமையை யொட்டி ஊகத்தாற் கூறப்பட்டதெனவே கொள் ளுதல் வேண்டும்.

3. “குதிரை பூட்டப்பட்டு இயங்குக்தேர்’ என விரிந்து வழங்குதற்குரிய தொடர் குதிரைத்தேர்' என இடையே வேண்டுஞ்சொற்கள் மறையத் தொகுத்து வழங்கப்பெற்றாற் போன்று தலைவனது பரத்தைமையால் தலைவிக்குத் தோன்றிய வாயில் என விரிந்து வரவேண்டிய தொகைநிலைத்தொடர், ப்ரத்தைவாயில் எனத் தொகுத்து வழங்கப்பேற்றது என்பதாம்.