பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


శ్రీ தொல்காப்பியம் . பொருளதிகாரம்

இதனாற் பயன் அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருமாகிய தலைவியர் ஊடற்குரியரென்பது உம் அவர்பால் தத்தந் தலைவர் ஊடறீர்த்தற்குரிய வாயில் விடுவ ரென்பது உம், அவர் வாயின் மறுத்தலும் நேர்தலும் உடைய ரென்பது உம், ஏனைப்பரத்தையர்க்கு வாயில்விடுதல் இன் ரென்பது உங் கூறியவாறாயிற்று. 'ஒருபாற் கிளவி (தொல். பொ. 222) என்பதனால் ஒரோவோர்குலத்துத் தலைவருந் தலைவியரும் அடங்குமாறுணர்க. உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. ஒருவனும் ஒருத்தியுமாகி இன்பதுகர்ந்து இல்லற நிகழ்த்துதலே சிறந்ததென்றற்கு இங்ங்ணம் பலராதல் வழுவென்று அதனை அமைத்தார். (க.0)

ஆய்வுரை :

இது. பரத்தையிற் பிரிவுக்கு உரியார் இவர் என்பதும் அப் பிரிவு நிகழும் இடம் இதுவென்பதும் உணர்த்துகின்றது.

(இ - ள்) பரத்தையிற் பிரிவு காரணமாகப் பாணர் முதலி யோரை வாயிலாக அனுப்புதல் மருதநிலத் தலைவர்க்கே சிறப் புரிமையுடையதாயினும் நானிலத் தலைவர் க்கும் ஒப்பவுரியதாகும்.

அவ்வழிப் பிரியும் பிரிவு, தாம் வாழும் நிலத்தைக் கடந்து நிகழ்தல் இல்லை. எ-று.

நிலம் பெயர்தல் இல்லை யெனவே, தாம் வாழும் ஊரகத்தும் அதனைச் சார்ந்த புறஞ்சேரியகத்தும் அன்றித் தலைவன் தனக் குரிய நிலமல்லாத புறநிலத்தே பரத் தமை காரணமாகப் பிரிந் துறைதல் அவனது மனை வாழ்க்கைக் கடமைக்கும் அவனது தலைமைக்கும் ஒத்ததன்று என அறிவுறுத்தவாறாயிற்று.

உஉக. ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப்

பிரித லச்சம் உண்மை யானும் அம்பலும் அலருங் களவுவெளிப் படுக்குமென்று அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்

போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்.