பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா ) όηξf

'ஆனா தலைக்கு மறனில் அன்னை

தானே யிருக்க தன்மனை யானே.” (குறுந் 262)

இஃது, இடையூறு பொருளின் கட் போக்குடன்பட்டது.

ஏனைய முன்னர்க் காட்டியவற்றுட் காண்க. 'ஒன்றித் தோன்றுந் தோழி மேன (தொல். பொ. 39) என்பதனால் தோழிக்கும் இவையுரியவென்று கொள்க. உடன் போக்குக் சருதுதலுந் தலைவன் தான் வரையாமல் தலைவி விரும்புதலும் வழுவாய் அமைந்தன. (க.க)

ஆய்வுரை :

இது, களவொழுக்கத்தின்கண் தலைவிக்கு உரியதோர் இயல்பு உணர்த்துகின்றது.

(இ - ள் ) (இடைவிடாது இன்பம் நுகர்தலோடு) மனை யற ம நிகழ்த்தும் உரிமையை உறுதியாக வேண்டுதலானும், வினை நிகழ்ததுதலில் விருப்புடைய ஆண்மக்கள் தம்மை விட்டுப் பிரிவர் என்னும் அச்சம் பெண்டிர்க்கு இயல்பாதலானும், களவொழுக்கத்தைப புறத்தார்க்கு வெளிப்படுத்தும் என்று அளுசும்படி தோன் றிய அம்பலும் அலரும் ஆகிய இருவகைக் குறிப்பினாலும், தலை வனது வருகையை எதிர்நோக்கியிருந்த நிலைமைக் கண் வந்த அவனுடன் அளவளாவுதற் கியலாதபடி இடையூறு நேர்தலானும் தலைவனோடு உடன்போதற்குறிப்பும் ஏன் இன்னும் மணஞ்செய்து கொள்ளவில்லை?" எனத் தலைவனை வினவுங் குறிப்பும் தலை மகளிடத்தே தோன்றும். எ-று.

போக்கு - உடன் போக்கு, என்றது தலைவனுடன் போதல் வேண்டும் என்னுந் தலைவியின் உள் ளக்குறிப்பு :

வரைவு - மணத்தல், என்றது ஏன் மணந்து கொள்ளவில்லை யெனத் தலைமகளுள்ளத்தே தோன்றும் வரைவு கடாதற் குறிப பினை.

1. தான் அவள் என்னும் வேற்றுமையின் றித் தலைவியுடன் கருத்தொரு மித்து ஒன்றிய உள்ளமுடையாள் என்பதனை ஒன்றித் தோன்றுக் தோழி! என் பதனால் ஆசிரியர் குறித்தாராதலின் தலைவியின் உள்ளத்தே தோன்றிய இவ்வெண். ணங்கள் அவளுடன் ஒன்றியவுள்ளத்தினளாகிய தோழிக்கும் உரிய எனக்கொண். டார் கச்சினார்க் கினியர்.