பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூற்பா கூக ఛ్డి

(இ - ள் வருத்தமிகுதி சுட்டுங்காலை-தோழியும் அறி வரும் பரத்தையிற் பிரிவால் தலைவர்க்குந் தலைவியர்க்குந் தோன் றிய வருத்தமிகுதியைத் தீர்க்கக் கருதிக் கூற்று நிகழ்த்துங் காலத்து; வாழ்க்கையுள் இரக்கம் உரித்தென மொழிய - அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக்கண்ணே தமக்கு வருத்தந்தோன்றிற்றாகக் கூறுதலும் உரித்தென்று கூறுவராசிரியர் (எ . று.)

'நீர் நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்குந் தணத்தனை ஆயினெம் இல்லுய்த்துக் கொடுமோ அந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க் கடும்பாம்பு வழக்குந் தெருவில் நடுங்களுர் எவ்வங் களைந்த வெம்மே." (குறுந். 354)

இதனுள் இல்லறத்தினை நீ துறந்தாயாயின் எம்மை எம் மூர்க்கண்ணே விடுக'வெனத் தனக்கு வருத்தந்தோன்றிற்றாகத் தோழி கூறியவாறு காண்க.

உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயந் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு நின்றாய் நீயே யிஃதோ ஒரா வல்சிச் சீரில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள் வந்தென இணிவிழ வாயிற் றென்னுமிவ் ஆரே.’’ (குறுந் 295)

இதனுள் ஒரா வல்சி'யொடு முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவன் வந்தானாகப் புறத்து விளையாடும் விழவுள தாயிற் றென்று இவ்வூர் கூறா நிற்குஞ் செல்வம் இவளை ஞெகிழ்ந்தாற் பழைய தன்மையாமென்று அறிவர் இரங்கிக் கூறியவாறு காண்க.

1. இங்கு வருத்தம் என்றது. பரத்தமை காரணமாகத் தலைவியர்க்கும் தலைவர்க்கும் தோன்றிய மன வருத்தத்தினை. மிகுதியென்றது அவ்வருத்தம் கணவன் மனைவி யென்னும் இருவருள் ளத்தும் மிக்குத்தோன்றுதல்ை.சுட்டுதலாவது, அவர் தம் வருத்தத்தைத் தீர்க்கக்கருதித் தோழி அறிவர் முதலியோர் தலைவன் தலைவியாகிய அவ்விருவரிடத்தும் உரை கிகழ்த் துதல். தோழி முதலியோர் கூறும் கூற்றின் கண் அவ்விருவரது மனைவாழ்க்கைகள் பற்றியும் இரக்கவுணர்வு தோன்றும் என்பதாம்.

2. சுட்டுங்காலை வாழ்க்கையுள் இரக்கம் உரித்து எனவே வருத்தமிகுதி யினை ச் சுட்டுவோராகிய தோழிமுதலியோர் கூற்றின் கண் அவ்விருவரது மனை வாழ்க்கை பற்றிய இரக்கவுணர்வுதோன்றும் எனக் கொண்டார் கச்சினார்க்கினியர்.