பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靜 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

'துறைமீன் வழங்கும்’ (அகம். 316) என்பதனுள்,

'அதுபுலந் துறைதல் வல்லி யோரே'

எனப் புலவியால் நின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க.

இன்னும் உய்த்துக்கொண்டுணர் தலென்பதனால் ஏனைப் பிரிவான் நிகழும் வருத்தமிகுதியைக் குறித்தவிடத்து உயிர் வாழ்க் கையின் இரக்கமுரித்தென மொழிப என்றும் பொருள் கூறிச்,

  • செல்லாமை புண்டேல்’’ (குறள், 115)

எனவும்,

"அன்பற மாறியா முள்ள' (கலி 19)

எனவும் வருவன பிறவுங் கொள்க. (н.е.)

ஆய்வுரை :

இஃது இன்பமேநிகழும் மனைவாழ்க்கையுள் இரங்க லுணர்வு தோன்றுதலுமுரித்தென்கின்றது.

(இ - ள்) தலைவியின் வருத்தமிகுதியை உணர்த்தும் நிலை யில் மனைவாழ்க்கையில் இரங்கலுணர்வு தோன்றுதலுரியது என் பர் புலவர். எ-று.

தலைமகனது பரத்தையிர் பிரிவு காரணமாகத் தலைவிக்கு உளதாகிய வருத்தத்தின் மிகுதியினை த் தலைவனுக்கு அறிவுறுத் தும் நிலையில் அங்ங்னம் அறிவுறுத்தப் புகுந்த தோ ழி அறிவர் முதலிய வாயில்கள் உள்ளத்திலே இரங்கலுணர்வு தோன்றுதல் உண்டு என்பதாம்.

வையாவிக்கோப்பெரும்பேகன் தனது மனைவியைத் துறந் திருந்தானாக அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றுார் கிழார் ஆகிய புலவர் பெருமக்கள் அகத் திணை மரபின் படி தம்மைப் பாண ராகவைத் துப்பாடிய செய்யுட்கள் மனைவாழ்க்கையில் இரங்க லுனர் வைப் புலப்படுத்தல் காணலாம்.