பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கி.பாருளியல் - நூற்பா கூஉ 解「藝

உஉங். மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்

நினையுங் காலைப் புலவியுள் உரிய.

இளம் பூரணம் :

என்-எனின். கற்புக்காலத்துத் தலைமகட் குரியதோர் மரபு

உணர்த்திற்று."

(இ-ள்.) தலைமகள் உயர்வும் தலைமகன் தாழ்வும் ஆரா

யுங் காலத்துப் புலவிக்காலத்து உரிய வென்றவாறு.

எனவே, ஒழிந்த ஊடல் துனியென்பனவற்றிற் குரியவாம்.”

ஒருஉக் கொடி யியல் நல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய எமக்குநீ யாரைப் பெரியார்க்கு அடியரோ ஆற்றா தவர் :

கடியர் நமக்கி யார்சொலத் தக்கார் மாற்று வினைக்கெட்டு வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின் மாய மருள்வா ரகத்து :

ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என் கண் எவனோ தவறு. ’’ ) پایینی . ژی و(

இதனுள் தலைமகன் பணிவுத் தலைவி யுயர்வுங் காண்க. இஃது ஈண்டுக் கூறியதென்னை? காமக் கடப்பினுட் பணிந்த கிளவி (கற்பியல். க.க) யென மேற்கூறப்பட்டதாலெனில், ஆண்டுக் கூறியது ஊடல் புலவி துணி யென்னு மூன்றிற்கும் பொதுப்பட நிற்றலின், இது புலவிக்கே உரித்தென்னுஞ் சிறப்பு நோக்கிக் கூறியவாறு காண்க." (н.е.)

1. 'கற்புக் காலத்துத் தலைமக்க ட் குரியதோர் மரபு உணர்த்திற்று' என இத் தொடர் இருத்தல் வேண்டும்,

2. 'எனவே ஒழிந்த ஊடல் துனியென்பவற்றிற்குரியவல்ல' என இல் வுரைத் தொடரைத் திருத்திப்பொருள் கொள்ளுதல் வேண்டும்.

3. “காமக் கடப்பினுட்பணிந்த கிளவி

காணுங்காலைக் கிழவோ ற்குரித்தே வழிபடு கிழமை ய வட் கியலான' (கற்பியல்-ய க.)