பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


if தொல்காப்பியம்-பொருளதிகாரம்

நச்சினார்க்கினியம் :

இது, கற்பினுள் தலைவற்குந் தலைவிக்கும் எய்தியதோர் வழுவமைக்கின்றது.

(இ-ள்.) புலவியுள் மனைவி உயர்வும் புலவிக் காலத்துத் தலைவன் பணிந்துழி உட்கும் நாணு மின்றித் தலைவி அதனை ஏற்றுக்கோடலும்; கிழவோன் பணிவும்-தலைவன் தலைமைக்கு மாறாகத் தலைவியைப் பணிதலும் நினையுங்காலை உரிய ஆரா யுங் காலை இருவர்க்கு முரிய (எ - று

'வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணி வான் போலவும் கோதை கோலா விறைஞ்சி நின்ற ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்.' (கலி.128)

இது, முன்னே தலைவி மனத்து நிகழ்தலுண்மையிற் கனவி லுங் கண்டாளென்றுணர்க

'தப்பினேன் என்றடி சேர்தலும் உண்டு' (கலி. 89) என்பதும் அது.

"நினையுங்காலை யென்றதனால் தோழியுயர்வுங் கிழவோன் பணிமொழி பயிற்றலுங் கொள்க.

'ஒன்று, இரப்பான்போல் எளிவந்துஞ் சொல்லும் உலகம்

புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான் போல் நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன் இல்லோர் புன்கண் ஈகையில் தணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடையன்

என மேல் தலைமகன் பணிவும் தலைவியுயர்வுங் கூறியவர் ஈண்டுங்கறியது, கூறியது கூறல் என்னுங்குற்றம காதோ என்பது வினா. கற்பியலிற் கூறிய அவ்விதி ஊடல் புலவி துனியென்ற மூன்றிற்கும் பொதுப்படக் கூறியது. இங்குக் கடறிய விதி புலவிக்கேயுரியதாகும். ஆதலின் குற்றமாகாது என்பது இளம்பூரணர் கூறும் விடை யாகும்.

பிணக்கங்தோன்றிச் சிறிதுபொழுது கிகழ்வது புவிை எனவும் அப்பிணக்கம் அதனின் மிக்கு கீட்டித்து கின்ற ஊடல் எனவும், அப்பிணக்கம் முதிர்க்தநிலை துணி என வும் வழங்கப்படும்.