பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-நூற்பா கங் ፱፻፹፩ .

அன்னான் ஒருவன் தன் ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொல் கேட்டீ சுடரிழாய் பன்மாணும்.' (கலி 47)

இதனுள் தலைவன் இரந்துரைத்தவாறுந் தான் அதனை ஏற்றுக்கொண்டவாறுங் காண்க. இச்சூத்திரம் புலவிக்கே கூறி னார். ஊடற்குத் துணிக்குங் காமக்கடப்பின் (தொல், பொ. 160) என்பதனுட் கூறினாரென வுணர்க." (ніж )

ஆய்வுரை :

இது, கற்புக் காலத்துத் தலைமக்கட்குரியதோர் இயல்பு கூறு கின்றது.

(இ - ள்) மனை வி தன்னைக் கணவன் பணிந்தபொழுது அச்சமும் நாணமுமின்றி அவனது வணக்கத்தினையேற்றுக்கொள் ளும் உயர்வுடையளாதலும் கணவன் தனது தலைமைக்கு மாறாகத் தலைவியைப் பணிந்து தாழ்தலும் ஆராயுங்கால் புலவிக் காலத்து உரிய எ-று.

தலைமகள் உயர்வும் தலைமகன் தாழ்வும் புலவிக்காலதது உரிய எனவே, அப்புலவி நீட்டித்தலாகிய ஊடற்காலத்தும் அவ் ஆடல் துனியாய் முதிர்ந்தகாலத்தும் மனைவியுயர்வும் கிழவோன் பணிவும் உரிய வாகா என்றாராயிற்று.

உஉச. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற்

புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே.

இளம்பூரணம் :

என்-எனின். இதுவுமோர் மரபுணர்த்திற்று.

(இ - ள்.) கற்புக்காலத்து நிகழா நின்ற தகையின் பக்கத்து வேட்கை மிகுதியாற் புகழ்தலை நீக்கார் என்றவாறு.

களவுக்காலத்து நலம்பாராட்டிய தலைமகன் கற்புக் காலத்து மெழினலம் பாராட்டப்பெறும் என்றவாறு.”

1. இவ்விளக்கம் இளம்பூரணருரையைத் தழுவியமைக்ததாகும்.

2. களவொழுக்கம் நிகழுங்காலத்தில் தலைவியின் எழில் கலத்தினைப். பாராட்டி மகிழ்ந்த தலைவன் கற்புக்காலத்தும் தலைவியின் எழில் கலத்தினைப் பாராட்டி மகிழ்வான் என்பதாம்.